பொன்னியின் செல்வன் பார்ப்பதற்கு யாத்திசை பார்க்கலாம்..ப்ளு சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை : தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் கே ஜே கணேஷ் தயாரிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் யாத்திசை.
இதில் குரு சோமசுந்தரம், மு.சந்திரகுமார், செம்மலர் அண்ணம், புதுமுகங்களான சக்தி, சேயோன், ராஜலட்சுமி, வைதேகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்கள் பல கோடியில் எடுக்கப்பட்ட நிலையில் யாத்திசை திரைப்படம் வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
யாத்திசை விமர்சனம் : சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இப்படத்தில் உள்ள நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து உள்ளார். சேர சாம்ராஜ்ஜியத்தையும், சோழர் சாம்ராஜ்ஜியத்தையும் அடியோடு வீழ்த்திவிட்டு பாண்டி மன்னர்கள் கொடி கட்டி பறக்கும் காலகட்டத்தில், எய்னர்கள் வேட்டையாடி பிழைத்து வருகின்றனர். இந்த குழுவில் இருந்து போதி என்கிற வீரன், பாண்டி மன்னர்களை வீழ்த்தி விட்டு அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறான்.
அதிகாரப்போட்டி : அப்போது மன்னராக இருந்து ரணதீரப்பாண்டியனுக்கும் போதிக்கும் நடக்கும் அதிகாரப் போட்டி தான் யாத்திசை திரைப்படத்தின் கதை. இந்த படம் பாண்டியர்கள் ஆட்சி செய்து வந்த காலத்தில் நடந்த வரலாற்று சம்பவத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட வரலாற்று கதை இல்லை, புனையப்பட்ட வரலாற்று கதையாகும்.

படத்தின் பலம் : படம் 7ம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடப்பதால், அந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்கள் எந்த மொழி பேசி இருப்பார்கள், எப்படி இருந்திருப்பார்கள், எப்படி உடை அணிந்து இருப்பார்கள், அவர்களின் போர் முறை என்ன, அவர்கள் பயன்படுத்தி பொருட்கள் என்ன போன்றவற்றை இயக்குநர் ஆய்வு செய்து அதை திரையில் கொண்டு வந்து, வெற்றியும் பெற்றுள்ளார்.
மைனஸ் : இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்க வேண்டிய படம், கையில் வைத்திருந்த பணத்தைவைத்து படம் எடுத்ததால், பல காட்சிகளில் அது அப்பட்டமாக தெரிந்து விட்டது. சின்ன பட்ஜெட் படம் என்பதால், படத்தில் பெரும்பாலானவர்கள் புதுமுகமாக இருந்தால் சில காட்சிகள் மனதில் ஒட்டவில்லை.

பல நிறைகள், சில குறைகள் : அந்த காலத்தில் எந்த மாதிரி தமிழ் பேசினார்கள் என்பதை இயக்குநர் பல ஆராய்ச்சி செய்து, கதாபாத்திரங்களை பேசவைத்துள்ளார். ஆனால், அதுவே இந்த படத்தில் பெரிய பிரச்சனையாகி உள்ளது. அவர்கள் என்ன தமிழ் பேசினார்கள் என்று புரியவில்லை. இதனால், சப்டைட்டில் போட்டுள்ளார்கள். தமிழ் படத்திற்கே தமிழில் சப்டைட்டில் போட்டது இதுதான் முதல் முறை, மொத்தத்தில் யாத்திசை திரைப்படத்தில் பல நிறைகள் இருந்தாலும், சில குறைகள் இருக்கிறது.
புதிய முயற்சி : என்னத்தான் இத்திரைப்படம் வரலாற்று புனையப்பட்ட கதையாக இருந்தால், இந்த படத்திற்காக பல ஆராய்ச்சிகளை இயக்குநர் செய்திருக்கிறார் இது பாராட்டுக்குரிய விஷயம். பொன்னியின் செல்வன் படத்தில் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை, ஒரு மேடை நாடகத்தை திரையில் பார்த்தது போலத்தான் இருந்தது. ரோமோஷன் செய்து எப்படியோ படத்தை ஜெயிக்க வைத்துவிட்டார்கள். ஆனால், யாத்திசை படத்தில் புதிதாக முயற்சி செய்து இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை திரையில் பாருங்கள் என்று ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











