Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?

சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியான கில்லி படம், 20 ஆண்டுகள் கழித்து தற்போது ரீ -ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள கில்லி படம், விஜய் கேரியரில் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது, அவரை மாஸ் ஹீரோவாகவும் ரசிகர்களிடையே அறிமுகம் செய்தது,

பாடல்கள், காமெடி, ஆக்சன், சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்சியல் படமாக கில்லி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த காலகட்டத்திலேயே 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது கில்லி. இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இந்த படம் ரீ -ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வசூல் மழை பெய்து வருகிறது.

Director dharani revealed secrets of Jeep scene in Ghilli movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் மிகப்பெரிய மாஸ் ஹிட் படமாக அமைந்தது கில்லி. விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் என இந்த படத்தின் அட்ராக்ஷன்களாக ஏராளமான விஷயங்கள் அமைந்தன, கடந்த 2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான இந்தப்படம் அந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆக்சன், ரொமான்டிக் படங்கள் என நடித்துவந்த விஜய்யை, கமர்ஷியல் ஹீரோவாக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது கில்லி. ஆக்ஷன், காமெடி, பாடல்கள், ரொமான்ஸ், சென்டிமென்ட், விளையாட்டு என அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது கில்லி. கடந்த 2004ம் ஆண்டில் வெளியான கில்லி படம் அந்த காலகட்டத்திலேயே 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

கில்லி படம் ரீ -ரிலீஸ்: இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகள் கழித்து இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் அதிகமான படங்கள் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு வரும் சூழலில் அதிலும் தான் மாஸ் என்பதை தற்போது விஜய் நிரூபித்துள்ளார். ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே அதிகமாக வசூலித்த படமாக கில்லி காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கில்லி ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் படத்தை பார்த்து வருகின்றனர். படம் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை இந்தப்படம் ஒளிபரப்பப்படும் போதும் டிஆர்பியில் கெத்துக்காட்டி வருகிறது.

இயக்குநர் தரணி: மேலும் படம் ஓடிடியிலும் காணக்கிடைக்கிறது. இருந்தபோதிலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப்படம், தற்போதைய தலைமுறையினரையும் வெகுவாக கவர்ந்து கொண்டாட்டம் போட செய்து வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் இந்தப்படத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்து வருகின்றனர். இந்தப்படத்தின் இயக்குனர் தரணி அப்போது மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். ஆனால் ஒரு காலகட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத சூழல் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த ரீ -ரிலீஸ் மூலம் அவர் கவனம் பெற்று வருகிறார்.

Director dharani revealed secrets of Jeep scene in Ghilli movie

விஜய் ஜீப்பை தூக்கும் காட்சி: இந்நிலையில் படம் குறித்தும் படம் உருவான விதம் குறித்தும் தற்போது அவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். படத்தில் அர்ஜுனரு வில்லு என்ற பாடலில் ஜீப்பை ஓட்டி வரும் விஜய், ஒரு கட்டத்தில் ஜீப் நிற்கும் சூழலில் அதனை தன்னுடைய கைகளாலேயே தூக்குவதாக காணப்படும். இது சாத்தியமா என்று தற்போது தரணி விளக்கியுள்ளார். இது சாத்தியம் இல்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். மாருதி போன்ற கார்களை ஓரளவுக்கு தூக்க முடியும் என்றும் ஆனால் படத்தில் காட்டப்படும் ஜீப்பை தூக்குவது சாத்தியம் இல்லை என்றும் ஆனால் ஹீரோ அனைத்து விதத்திலும் மாஸ் என்பதை காட்டுவதற்காக அந்த காட்சி வைக்கப்பட்டதாகவும் தரணி ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

செமி பைனல் டூ பைனல்: மேலும் படத்தில் செமி பைனலில் தவற விட்டு விட்டோம் பைனலில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறும் காட்சி குறித்தும் தரணியிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், பெஸ்ட் ஆஃப் 3 என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேலுவின் தங்கையாக நடிக்கும் நடிகை செமி பைனலில் அவர் வாங்கிய கோப்பை உள்ளிட்டவற்றை காண்பிப்பதாக படத்தில் காட்சி இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X