'குடிப்பழக்கத்துக்கு அடிமையானேன்.. விஜய் பட வாய்ப்பை இழந்தேன்'.. பிரபல இயக்குனர் வேதனை!

குடிப்பழக்கத்தின் காரணமாக விஜய் பட வாய்பை இழந்திருக்கிறார் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.

Recommended Video

27 years of Vijayism | Nalaiya Theerpu - Bigil | Thalapathy Vijay

சென்னை: குடிப்பழக்கத்தால் விஜய் பட வாய்ப்பை இழந்ததாக பிரபல இயக்குனர் தினந்தோறும் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

முரளி, சுவலட்சுமி இயக்கத்தில் கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்து ஹிட்டான படம் தினந்தோறும். இந்த படத்தை இயக்கியவர் நாகராஜ். இவரை தினந்தோறும் நாகராஜ் என்று தான் எல்லோரும் அழைப்பர்.

அபார திறமைகளை கொண்ட நாகராஜ் தினந்தோறும் திரைப்படத்தின் வெற்றியினால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். எந்நேரமும் குடித்துக்கொண்டே இருந்ததால் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியவில்லை.

 கவுதம் மேனனின் வசனகர்த்தா

கவுதம் மேனனின் வசனகர்த்தா

மின்னலே, காக்க காக்க உள்பட கவுதம் மேனனின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் நாகராஜ் தான். பல முன்னணி இயக்குனர்களின் படங்களில், கதை விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்டு சீன் சொல்வதையே தனது பணியாக மாற்றிக்கொண்ட நாகராஜ், குடிப்பதையே முழுநேர வேலையாக செய்துவந்தார். இதனால் அவரை நம்பி பட வாய்ப்பு தர யாரும் முன்வரவில்லை.

விஜய் படம்

விஜய் படம்

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நாகராஜ், குடிப்பழக்கத்தால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியிடம் 3 மணி நேரம் கதை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போய்விட்டது. மறுநாள் ஒப்பந்தம் போடுவதாக இருந்தது.

வாய்ப்பை இழந்தேன்

வாய்ப்பை இழந்தேன்

ஆனால் நான் அன்று வழக்கம் போல் குடித்துவிட்டு அவரது அலுவலகம் சென்றேன். அது எஸ்.ஏ.சிக்கு பிடிக்கவில்லை. எந்நேரமும் குடிக்கும் என்னை நம்பி படம் தர அவர் விரும்பவில்லை. அதனால் விஜய் பட வாய்ப்பை இழந்தேன்", என தெரிவித்துள்ளார்.

முழுமையாக மீண்டுவிட்டார்

முழுமையாக மீண்டுவிட்டார்

தினந்தோறும் நாகராஜ் தற்போது குடிப்பழக்கத்தில் இருந்து முழமையாக மீண்டுவிட்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் மதுவை கையில் கூட தொடுவதில்லை. இதனால் அவரை நம்பி படங்களை தர தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கின்றனர். தற்போது புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் நாகராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X