The Legend: லெஜண்ட் சரவணனின் பட வேலைகளை துவங்கிய இயக்குநர்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் லெஜண்ட் சரவணன், விவேக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான தி லெஜண்ட் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்த நிலையில் அவரது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மார்ச் மாதத்திலேயே பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் துரை செந்தில்குமார் கருடன் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது.

Director Durai Senthil kumar starts legend Saravanan s next movie works in Chennai

நடிகர் லெஜண்ட் சரவணன்: நடிகர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான தி லெஜண்ட் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் சரவணனுடன் இணைந்து விவேக், ஊர்வசி ரவுடேலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஜேடி -ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சயின்டிஸ்ட்டாக லெஜண்ட் சரவணன் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு முதல் படமாக இருந்த சூழலில் படத்தை அவரே தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வெற்றி படமாக மாறியது.

லெஜண்ட் சரவணனின் அடுத்தப்படம்: இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொடி, எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரி, சசிகுமார் நடிப்பில் கருடன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் கடந்த மார்ச் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் படத்தின் ரிலீஸ் இம்மாத இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த படத்திற்கான தன்னுடைய வேலைகளை துரை செந்தில்குமார் முடித்துள்ளதாகவும் இதனால் அடுத்ததாக லெஜண்ட் சரவணனின் அடுத்தப்பத்திற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேலைகளை துவங்கிய துரை செந்தில்குமார்: இதற்காக சென்னையில் தங்கியிருந்து படத்திற்காக ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்து விட்டதால் அவரது இயக்கத்தில் நடிக்க, லெஜண்ட் சரவணன் ஓகே சொன்னதாக தகவல்கள் வெளியான சூழலில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோயின் குறித்த அறிவிப்பு: இதனிடையே, படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு யார் ஜோடியாவார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நயன்தாராவுடன் துரை செந்தில்குமார் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் லெஜண்ட் சரவணனின் படத்தை இயக்கி முடித்துவிட்டு அடுத்ததாக நயன்தாராவுடன் துரை செந்தில்குமார் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X