twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜாவின் இசை இல்லாததால்.. எனது படம் தோல்வி அடைந்தது… பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

    |

    சென்னை : நான் இயக்கிய திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை இல்லாததால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.

    Recommended Video

    TALKING 2 MUCH EP-09 | SPB SHORTFILM ENTRY ! | FILMIBEAT TAMIL

    சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வரும் இ.ராமதாஸ் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை, வசூல்ராஜா எம்பிபிஎஸ், விக்ரம் வேதா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    இவர் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான திரைப்படத்தில் இளையராஜாவின் இசை இல்லாமல் போக அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    எஸ்பிபியின் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ!எஸ்பிபியின் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ!

    இ.ராமதாஸ்

    இ.ராமதாஸ்

    சினிமாவில் பல நடிகர்கள் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் சில சமயங்களில் இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் என பல துறைகளில் திறமை பெற்றவர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் ரசிகர்களுக்கு பெரும்பாலும் நடிகராகவே பரிச்சயமான இ.ராமதாஸ் இயக்குனராகவும், எழுத்தாளராகவும் பல வெற்றித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

    இயக்குனராக அறிமுகமான

    இயக்குனராக அறிமுகமான

    வசூல்ராஜா எம்பிபிஎஸ், காக்கிச்சட்டை, குக்கூ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மிகப்பிரபலமான நடிகராக இருந்து வரும் நடிகர் இ.ராமதாஸ் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமான திரைப்படம் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்".

    சில காரணங்களால்

    சில காரணங்களால்

    பல இன்னல்களைத்தாண்டி இயக்குனராக "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்ற திரைப்படத்தை இயக்கிய இ.ராமதாஸ் அந்தத் திரைப்படத்திற்கு ஒரு சில காரணங்களால் இசைஞானி இளையராஜாவை இசையமைக்க வைக்காமல் போக, பின் அந்த திரைப்படத்தில் இளையராஜாவிடம் பணியாற்றிய வி.எஸ் நரசிம்மன் என்பவர் இசையமைத்திருந்தார்.

    இளையராஜாவின் இசை

    இளையராஜாவின் இசை

    சிறந்த கதை களத்தைக் கொண்டு அப்போது உச்ச நட்சத்திரமாக இருந்த மோகன், சீதா, ரஞ்ஜினி, கவுண்டமணி என பிரபலமான நடிகர்கள் நடித்திருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதைப்பற்றி பேட்டி ஒன்றில் கூறிய ராமதாஸ் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் அதில் இளையராஜாவின் இசை இல்லாததால் தான் எனக் கூறியுள்ளார்.

    சூப்பர் டூப்பர் ஹிட்

    சூப்பர் டூப்பர் ஹிட்

    இவ்வாறு இயக்கிய முதல் திரைப்படமே மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்த நிலையில், இரண்டாவது திரைப்படத்தில் கட்டாயமாக இளையராஜாவின் இசையை கொண்டு வந்துவிடவேண்டும் என்று, நடிகர் ராமராஜனை வைத்து ராஜா ராஜாதான் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் ஒருவழியாக இளையராஜாவின் இசையை கொண்டுவர, படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவ்வாறு இளையராஜாவின் இசை ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு எந்த அளவுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது என இந்தப் பேட்டியின் மூலம் தெரிவித்திருந்தார்.

    English summary
    Director E.Ramadoss Open Talk About Ilayaraja
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X