Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். நீண்ட காலங்களாக நிறுத்தி வைத்திருந்த இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். அடுத்தடுத்து ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் தனுஷுடன் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இதனிடையே அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் தனுஷ். பாலிவுட்டிலும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய படங்களை போலவே இந்தப்படமும் காதலை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Director Elan going to join with Dhanush in his next

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான கூட்டணிகளுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவரது அடுத்தடுத்த திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் படங்கள் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது இயக்கத்திலும் கவனம் செலுத்தி ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இரு படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார் தனுஷ். படத்தில் அவருடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

குபேரா படம்: இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிவருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். மும்பை உள்ளிட்ட இடங்களையொட்டி இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படங்களை தொடர்ந்து முன்னணி இயக்குநர்களுடன் கமிட்டாகி வருகிறார் தனுஷ். அடுத்ததாக பாலிவுட்டில் ஆனந்த் எல் ராயுடன் மூன்றாவது முறையாக அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனுஷ் -எலன் கூட்டணி: இதனிடையே மாரி செல்வராஜ், ஹெச் வினோத் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் தனுஷ் அடுத்தடுத்து இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் எலன், அடுத்ததாக தனுஷுடன் இணையவுள்ளதாக தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக கவின் நடித்துள்ள ஸ்டார் படம் ரிலீசாகவுள்ள சூழலில் அவர் தனுஷுடன் இணையவுள்ளதாக கூறியுள்ளது மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கான கதையை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை: மதுரையை கதைக்களமாக கொண்டு இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் உருவாகி வருவதாகவும் இந்தக்கதை தனக்கும் தனுஷிற்கும் மிகவும் பிடித்தமானதாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள நிலையில் சரியான நேரத்திற்காக இருவரும் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டார் படத்தின் ரிலீஸ் அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளது கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X