கவின் நடித்த ஸ்டார் படத்தோட பட்ஜெட் மற்றும் ரியல் பாக்ஸ் ஆபிஸ் எவ்ளோ தெரியுமா?.. ஓபனாக சொன்ன இளன்!

சென்னை: இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி வெளியானது. ஸ்டார் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு அந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு வரை வெளியான பல படங்கள் பெரிதாக வசூல் செய்யவில்லை.

கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு பிளாக்பஸ்டர் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தப் படத்தின் டிரைலர் அந்த அளவுக்கு ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் படம் வெளியான பின்னர் அந்த எதிர்பார்ப்பு அப்படியே குறைந்து விட்டது.

Kavin Star Elan

இந்நிலையில் இயக்குநர் இளன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்டார் படத்தின் பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

கவினுக்கு ஹாட்ரிக் வெற்றி: விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன் பின்னர் ஹீரோவாக நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நடித்தவருக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. அந்த படத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸுக்கு பிறகு கவின் நடிப்பில் வெளியான லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என வரிசையாக மூன்று படங்களும் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளன.

ஸ்டார் பட்ஜெட்: பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணை வைத்து பியார் பிரேமா காதல் படத்தை இயக்கி இயக்குநர் ஆனவர் இளன். படத்தையும் ஹரிஷ் கல்யாணை வைத்து இயக்கவே திட்டமிட்டார். ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அந்த படத்திலிருந்து ஹரிஷ் கல்யாண் வெளியேறிவிட்டார். அதன் பின்னர் கவின் ஸ்டார் படத்தில் நடிக்க ஆரம்பித்த நிலையில், அந்த படம் கடந்த மே 10 ஆம் தேதி திரைக்கு வந்தது. ஸ்டார் படத்தின் மொத்த பட்ஜெட் 10 முதல் 12 கோடி ரூபாய் இருக்கும் என இளன் கூறியுள்ளார்.

கலவையான விமர்சனம்: டிரைலரை பார்த்துவிட்டு ஸ்டார் படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறும் என பலரும் கருதினர். ஆனால் படம் வெளியான பின்னர் அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. சிலர் படம் சூப்பராக இருக்கிறது என்றும் சிலர் படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் விமர்சித்த நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தாமல் ஸ்டார் திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.

ஸ்டார் பட வசூல்: இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டார் படத்தின் இயக்குநர் இளன் ஸ்டார் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது என்றும் 26 கோடி வரை வசூல் செய்ததாக கூறியுள்ளார். 12 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான அந்த படம் 26 கோடி ரூபாய் வசூல் செய்தது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்றும் கூறினார்.

கியாரண்டி ஹீரோவான கவின்: போடுகிற பட்ஜெட்டை டபுள் மடங்காக கொடுக்கும் மினிமம் கியாரண்டி ஹீரோவாக கவின் மாறியுள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகி உள்ள பிளடி பெக்கர், கிஸ் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X