ஷாலினியை நீக்கிவிட்டு அக்‌ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்தது இதற்குத்தானா?

By

Recommended Video

விழித்துக்கொண்ட அக்னி சிறகுகள்.. ஐரோப்பா பறக்கும் படக்குழு | Agni Siragugal

சென்னை: 'அக்னி சிறகுகள்' படத்தில் ஷாலினி பாண்டேவை நீக்கியது ஏன் என்று அந்தப் படத்தின் இயக்குனர் நவீன் விளக்கம் அளித்தார்.

மூடர் கூடம் படத்தை இயக்கி நடித்த நவீன், கொளஞ்சி என்ற படத்தைத் தயாரித்தார். அடுத்து, அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையே, 'அக்கினி சிறகுகள்' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார்.

Director expalains Why actress shalini pandey has removed from Agni Siragugal

இதில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங், கொல்கத்தா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது.

இந்தப் படத்தில் ஹீரோயினாக, ஷாலினி பாண்டேவை முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் திடீரென்று அவரை நீக்கிவிட்டு அக்‌ஷரா ஹாசனை நடிக்க வைத்துள்ளனர். ஷாலினி பாண்டேவை நீக்கியது ஏன் என்று இயக்குனர் நவீனிடம் கேட்டோம்.

அவர் கூறும்போது, இந்தப் படத்தின் கதையை எழுதும்போதே, அக்‌ஷரா ஹாசனை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டோம். அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதனால் ஷாலினி பாண்டேவை வைத்து ஷூட்டிங்கை தொடங்கினோம். முதல் பாதிவரை ஹீரோயின் நடிக்கும் காட்சிகளை. ஷூட் செய்து முடித்துவிட்டோம். பிறகு, அக்‌ஷரா ஹாசன் கால்ஷீட் கிடைத்தது. அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் சரி என்றதால், ஷாலினி பாண்டேவிடம் சொல்லிவிட்டு, அக்‌ஷராவை ஒப்பந்தம் செய்தோம். பின்னர் ஷாலினி பாண்டே நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு, அக்‌ஷராவை நடிக்க வைத்து ஷூட் செய்தோம்' என்றார்.

இந்தப் படத்தில் மீரா மிதுன் நடிக்க இருந்ததாகவும் அவரை நீக்கிவிட்டு அக்‌ஷராவை ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.
இதுபற்றி நவீனிடம் கேட்டபோது, அவர் என்னிடம் வாய்ப்பு கேட்க வந்தார். உடனடியாக இல்லை என்று சொன்னால் நன்றாக இருக்காது என்பதால், நாகரிகமாக இருந்தால் அழைக்கிறேன் என்றேன். அவ்வளவுதான். அவருக்கு வாய்ப்புத் தருவதாக நான் சொல்லவில்லை என்றார் நவீன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X