twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பஞ்சராக்ஷரம்'ன்னா இதுதான் அர்த்தமாம்? விளக்குகிறார் இயக்குனர்

    By
    |

    சென்னை: பஞ்சராஷரம் என்றால் சிவன் என்று அந்தப் படத்தின் இயக்குனர் பாலாஜி வைரமுத்து தெரிவித்தார்.

    சாகசம் நிறைந்த திரில்லர் கதையை கொண்ட படமாக உருவாகியுள்ளது, பஞ்சராக்ஷரம். சந்தோஷ் பிரதாப், மது ஷாலினி, சனா அல்டாப், கோகுல் உட்பட பலர் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். பாலாஜி வைரமுத்து இயக்கியுள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    Director explains whats the meaning of Pancharaaksharam

    இதில், இயக்குநர் பாலாஜி வைரமுத்து பேசும்போது, பஞ்சராக்ஷரம் என்றால் சிவன். இந்தப்படத்தில் சிவனை உணரலாம். பொதுவாக எல்லோரும் ஒரு தவறு நடந்துவிடக் கூடாது என்று நினைப்போம். நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் செல்லும்போது விபத்து நடக்கக்கூடாது என்று நினைப்பதற்கும், நல்லபடியாகச் சென்று சேர வேண்டுமென்று நினைப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது.

    ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சரியாகக் கணித்து சொல்பவர்கள் குறைவு. நாம் எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கும். இந்தப்படம், சிறு சிறு நேர்மறையான எண்ணங்கள் மாறும் போது என்ன நடக்கும் என்பதைக் கூறும் என்றார்.

    Director explains whats the meaning of Pancharaaksharam

    நாயகன் சந்தோஷ் பேசும்போது, இதில் கதைதான் ஹீரோ. தனி நாயகன் படமாக இல்லாமல் 5 முக்கியமான பாத்திரங்களிடையே கதை பயணிக்கும் என்றார்.

    கலை இயக்குநர் சசி, பேசும்போது, இசையமைப்பாளர் சுமோ, படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டின், சண்டை பயிற்சியாளர் பில்லா ஜெகன் உட்பட பலர் பேசினர்.

    English summary
    Debutant director Balaji Vairamuthu says, Pancharaksharam is a supernatural thriller film. Pancharaksharam means Lord Siva. you can feel that in this Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X