ஆஹா... சொல்லவே இல்லை... இதுக்காகத்தான் சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' லேட்டாம்
Recommended Video
சென்னை: சிம்பு- ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தின், கால தாமதம் ஏன் என்பது பற்றி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகஇ ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜமீல். இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லட்சுமணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் காவி உடை அணிந்து ஹன்சிகா புகை பிடிப்பது போல் இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது.

ஜிப்ரான் இசை
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தக் கதையில் ஸ்ரீகாந்த், சாயா சிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சிம்பு - ஹன்சிகா
இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது.

விமானியாக
இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அவர் விமானியாக நடிக்கிறார். இப்போது கதையில் மாற்றம் செய்து சிம்பு கேரக்டரை இன்னும் அதிகமாக்கியுள்ளனர்.

உண்மைச் சம்பவம்
இதுபற்றி இயக்குனர் ஜமால் கூறும்போது, சிம்புவின் கேரக்டர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி அவர் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

விமான நிலையம்
படம் தொடங்கி நாட்களாகிவிட்டது. நிஜ விமானத்தில் சிம்புவின் போர்ஷனை படமாக்க வேண்டும் என்பதால் விமான நிலையம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால்தான் தாமதம். மற்ற காட்சிகள் முடிந்துவிட்டன. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











