»   »  ஓடும் ரயிலில் டைரக்டரின் தந்தை மரணம்!

ஓடும் ரயிலில் டைரக்டரின் தந்தை மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
சேலம்: ஓடும் ரயிலில் தமிழ் திரைப்பட இயக்குநர் மாதேஷின் தந்தை மரணம் அடைந்தார்.

விஜய் நடித்த மதுர படத்தை டைரக்ட் செய்தவர் மாதேஷ். இவர் தற்போது விஜயகாந்தை வைத்து அரசாங்கம் படத்தை இயக்கி வருகிறார்.

டைரக்டர் மாதேஷின் தந்தை ரத்னப்பா, தாய் ராதா இருவரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னையிலிருந்து, சேலத்திற்கு புறப்பட்டனர்.

ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்தில் ரத்னப்பா மயங்கி விழுந்தார். இதைக் கண்டு பதறிய அவரின் மனைவி ராதா, உடனே டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் கொடுத்தார்.

ரயில் அரக்கோணம் வந்த பின் டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Read more about: mathesh

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil