கூடுதல் பணம் கேட்டு தகராறு- சுஜிபாலா மீது புகார்

மதர் கிரீன்லேண்ட் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் உண்மை. இந்த படத்தில் சுஜிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ரவிக்குமார்தான் சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடைசி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தது நினைவிருக்கலாம்.
திருமணம் நின்று போன பிறகும், அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் சுஜிபாலா. ஆனால் சண்டிகரில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் சுஜிபாலா கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம்.
இது தொடர்பாக இயக்குனர் சங்கத்திலும் இயக்குநர் பி.ரவிக்குமார் புகார் செய்துள்ளார். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் சுஜிபாலாவிடம் பேசுவதாக கூறியுள்ளார்.
ரவிக்குமார் கொடுத்துள்ள புகாரில், "சண்டிகரில் 'உண்மை' படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து விமான டிக்கெட் எடுக்க சுஜிபாலாவுக்கு போன் செய்தேன். அவரது அம்மா போனை எடுத்து சூட்டிங் வர முடியாது என்று கூறி விட்டார். சுஜிபாலாவிடம் பேச வேண்டும் என்று கூறினால் போனை கொடுக்க மறுக்கிறார்.
படத்துக்கு பேசிய மொத்த சம்பளமும் கொடுத்து விட்டேன். ஆனால் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் ஷுட்டிங் அனுப்ப முடியும் என்று கூறுகிறார்கள். என்னை டைரக்டர் என்றும் பார்க்காமல் சுஜிபாலாவின் தாயார் மிகவும் கீழ்தரமாக பேசுகிறார். சண்டிகாரில் படப்பிடிப்புக்காக ரூ.25 லட்சம் செலவில் அரங்கம் அமைத்துள்ளோம்.
தற்போது மழை சீசன் என்பதால் அந்த செட் வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











