முதல்வன் படத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்காததற்கு இதுதான் காரணம்... இயக்குநர் காந்தி கிருஷ்ணா தகவல்

சென்னை: இயக்குநர் சங்கர் தற்சமயம் நடிகர் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி அவர் தெலுங்கில் ராம் சரனை வைத்து தொடங்கிய ஆர்.சி.15 திரைப்படத்தின் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் சங்கரிடம் துணை இயக்குநராகநைருந்து பின் இயக்குநரான காந்தி கிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

காந்தி கிருஷ்ணா

காந்தி கிருஷ்ணா

இயக்குநர் சங்கரிடம் துணை இயக்குநராக பணியாற்றி பின்னர் இயக்குநராகி வெற்றிகளையும் கண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களும் குறிப்பிடத்தக்கவர். நடிகர் அரவிந்த் சாமியை கதாநாயகனாக வைத்து ஏ.ஆர்.ரகுமான் இசையில், சுஜாதா திரைக்கதையில் இன்ஜினியர் என்கிற படத்தை துவங்கி அந்தப் படம் கைவிடப்பட்ட நிலையில் விஷாலை வைத்து செல்லமே என்கிற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. அதன் பிறகு ஆனந்தத் தாண்டவம் திரைப்படத்தை இயக்கினார்.

கரிகாலன்

கரிகாலன்

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விக்ரமை வைத்து கரிகாலன் என்கிற படத்தை அறிவித்திருந்தனர். வரலாற்றுப் படமாக உருவான அதற்கு கதை எழுதியது காந்தி கிருஷ்ணா அவர்கள்தான். படப்பிடிப்பு துவங்கப்பட்டு பின்னர் அதன் இயக்குநர் அந்தப் படத்திலிருந்து விலகவே காந்தி கிருஷ்ணாவை மேற்கொண்டு இயக்கச் சொன்னார்களாம். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அது பாகுபலி போன்ற கதை என்றும் அதற்கு முன்னரே எழுதப்பட்டது என்றும் காந்தி கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

இந்தியன்

இந்தியன்

எந்திரன் திரைப்படம் எப்படி நடிகர் கமலிடம் முதலில் கூறப்பட்ட கதையோ அதேபோல இந்தியன் திரைப்படமும் முதலில் ரஜினிகாந்திடம் கூறப்பட்ட கதையாம். அப்போது ஒரு வரிக் கதையாக ரஜினிகாந்த்திடம் கூறியிருக்கிறார் சங்கர். ஆனால் அப்போது அதில் நடிக்க அவர் விருப்பம் காட்டவில்லையாம். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவுடன் அந்தப் படத்தை தவற விட்டுவிட்டோமே என்று ரஜினி வருந்தினாராம். கண்டிப்பாக இந்தியன் போன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக எந்த நடிகராக இருந்தாலும் வருத்தப்படுவார்கள் என்று காந்தி கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

முதல்வன்

முதல்வன்

அதேபோல முதல்வன் திரைப்படத்தின் கதையும் முதலில் ரஜினிகாந்திடம் தான் சென்றது. அதன் பின்னர் விஜய்யிடம் சென்று இறுதியாக அர்ஜுன் நடித்திருந்தார். ஏன் முதல்வன் படத்தில் நடிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எங்களுடைய இயக்குநர் சங்கரின் கதைகள் ஃபோர்ஸாக பயம் காட்டிவிடும். முதல்வன் படத்தின் வலுவாக இருந்ததால் வேண்டாம் என்று கூறினார்களே தவிர நிராகரிக்கவில்லை. நடப்பில் முதல்வராக ஒருவர் முதல்வராக இருக்கும்போது அவரை எதிர்க்கும் வகையில் ஒரு கதையை கூறும் பொழுது எந்த ஹீரோவும் நடிக்க தயங்குவார்கள் என்று காந்தி கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X