அஜித், விஜய் ஒற்றுமையா இருக்காங்க.. குடும்பத்தோடு துபாய் போறாங்க.. கங்கை அமரன் பேட்டி!

சென்னை : நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11ந் தேதி வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக கொண்ட இந்த படத்தில் அஜித்,மஞ்சுவாரியர்,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

அதே போல, வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இருமொழியில் வெளியான வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். குடும்ப கதை அம்சத்தைக் கொண்ட இந்த படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளார்.

மோதிக் கொள்ளும் ரசிகர்கள்

மோதிக் கொள்ளும் ரசிகர்கள்

இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியானதால், வாரிசா.. துணிவா அடித்துப் பார்த்துவிடுவோம் என இணையத்தில் ஒரு பனிப்போரே நடந்து முடிந்தது. இரு படங்களும் வெளியாகி 10 நாட்கள் ஆகி உள்ளதால், எந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது என இரண்டு ரசிகர்கள் மோதி வருகின்றனர்.

கங்கை அமரன் பேட்டி

கங்கை அமரன் பேட்டி

இந்நிலையில், மேகத்தில் ஒன்றாய் நின்றோமே ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கங்கை அமரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கங்கை அமரன், சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் வெச்சாச்சு, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இப்போது இல்லை, நடிகர் திலகம் சிவாஜியும் இல்லை அந்த பட்டத்தை எடுத்துக்க சொல்லுங்க.

பட்டத்தை ஏன் திருடுறீங்க

பட்டத்தை ஏன் திருடுறீங்க

இருப்பவர்களின் பட்டத்தை ஏன் திருடி வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை. பட்டங்கள் ஒன்றும் செய்யப்போவதில் மனிதர்களிடம் தான் எல்லாம் இருக்கிறது. இளையராஜா இசைஞானி என்ற பட்டம் வாங்கி இருக்கிறார் அதை மரியாதைக்காக வைத்து இருக்கிறார் அவ்வளவு தான் என்றார்.

ஒற்றுமையாக இருக்கிறார்கள்

ஒற்றுமையாக இருக்கிறார்கள்

தொடர்ந்து பேசிய கங்கை அமரன், அஜித் விஜய்யை வைத்து வெங்கட்பிரபு விரைவில் ஒரு படம் எடுக்க உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைவரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறார்கள். நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் துபாய்க்கு குடும்பத்தோடு சொல்ல இருக்கிறார்கள் இது யாருக்காவது தெரியுமா. அவர்கள் இருவரும் ஒற்றுமை உடன் தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் ரசிகர்கள் தான் அடித்துக்கொள்கிறார்கள். நடிகர் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X