Gangai amaran: இளையராஜாவை சந்தித்த கங்கை அமரன்.. அட இதுதான் காரணமா.. வெங்கட் பிரபுவும் போயிருக்காரே!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பல திறமைகளுக்கு சொந்தக்காரர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பல தளங்களில் இவர் பயணித்து வந்துள்ளார். இவரது மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜியும் கோலிவுட்டில் நடிகர்களாகவும் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 77வது பிறந்த நாளை கங்கை அமரன் கொண்டாடி வருகிறார். அதை ஒட்டி அவர் தன்னுடைய அண்ணன் இளையராஜாவை அவரது வீட்டில் சென்று சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருடன் இயக்குநரும் அவரது மகனுமான வெங்கட் பிரபுவும் சென்றுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா: இசையமைப்பாளர் இளையராஜா 80 வயதை கடந்த நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் இணைந்து சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்து வருகிறார். அடுத்ததாக அவரது இசையமைப்பில் விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகச்சிறப்பான பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. குறிப்பாக வழிநெடுக காட்டுமல்லி பாடலை குறிப்பிடலாம். பண்ணைபுரத்திலிருந்து வந்து கோலிவுட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனும் சிறப்பான இசையமைப்பை கொடுத்துள்ளார்.

இயக்குநர் கங்கை அமரன்: இசையப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், நடிகர் என பல்வேறு தளங்களில் பயணித்து வரும் கங்கை அமரனின் மகன்கள் தான் பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு. இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவும் இசையமைப்பாளர்களாகவே செயல்பட்டு வரும் நிலையில், தன்னுடைய அப்பாவை போலவே கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இருவரும் நடிகர்களாகவும் இயக்குநராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருந்த கோட் படம் வெளியாகி சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

கங்கை அமரன் பிறந்தநாள்: இந்நிலையில் இன்றைய தினம் கங்கை அமரன் தன்னுடைய 77வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தன்னுடைய அண்ணன் இளையராஜாவை அவரது வீட்டில் சென்று சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது இயக்குநரும் கங்கை அமரனின் மூத்த மகனுமான வெங்கட் பிரபுவும் உடன் இருந்தார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய அப்பாவுடன் நெருக்கமாக உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

இளையராஜாவுடன் சந்திப்பு: பண்ணைபுரத்தில் இருந்து வந்த வைரமாக பார்க்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவரது தம்பி என்ற அடையாளத்தை தாண்டி கங்கை அமரன் தன்னை கோலிவுட்டில் சிறப்பாக அடையாளப்படுத்தியுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் உருவான 16 வயதினிலே படத்தில் சூப்பர் ஹிட்டடித்த செந்தூரப் பூவே என்ற பாடலை எழுதி தன்னுடைய சினிமா என்ட்ரியை துவங்கிய இவர், கடந்த 1982ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கோழி கூவுது படத்தின் மூலம் தன்னை இயக்குநராகவும் வெளிப்படுத்தினார். இவரது பயணம் இந்த வயதிலும் தொடர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











