பத்தே நிமிஷத்துல வரிகளை எழுதிட்டேன்.. விஜய்யின் கோட் பட 3வது சிங்கிள் குறித்து பேசிய கங்கை அமரன்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் விஜய் வாய்ஸிலேயே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்நிலையில் தற்போது படத்தின் மூன்றாவது சிங்கிளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிங்கிளை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள நிலையில் பாடலுக்கான வரிகளை பிரபல இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் எழுதியுள்ளார். ஸ்பார்க் என்ற இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.

Vijay GOAT movie Gangai Amaran

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. படத்தில் விஜய் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் முன்னதாக இந்த கேரக்டர்களின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்தடுத்த பாடல்கள்: இதில் இரண்டாவது பாடலில் அப்பா விஜய் மற்றும் சினேகா ஆகியோரை பார்க்க முடிந்தது. இந்த பாடலையும் பர்ஸ்ட் சிங்கிளையும் நடிகர் விஜய் பாடியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வெளியான படத்தின் மூன்றாவது சிங்கிளில் நடிகை மீனாட்சி சவுத்ரியுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் விஜய். யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள இந்த பாடலின் வரிகளை அவரது அப்பாவும் பிரபல இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கங்கை அமரன் எழுதியுள்ளார். இவரது வரிகள் இந்தப் பாடலுக்கு ஸ்பார்க்கை கொடுத்துள்ளது.

3வது சிங்கிளை எழுதிய கங்கை அமரன்: இந்த வயதில் இப்படிப்பட்ட வரிகளை கங்கை அமரன் இந்தப்பாடலுக்காக கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் இதுவரை ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியுள்ளதாகவும் ஆனால் விஜய்க்காக தான் எழுதிய முதல் பாடல் என்பதுதான் இந்த பாடலின் சிறப்பு என்றும் கங்கை அமரன் தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த வகையில் இந்தப் பாடல் சிறப்பாக மாறியுள்ளதாகவும் இந்தப் பாடலை அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய மகன் போன்றவர் என்றும் அவருக்காக பாடல் எழுதியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கங்கை அமரன் கூறியுள்ளார்.

10 நிமிடங்களில் எழுதினேன்: பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்தப் பாடலை தான் எழுதிவிட்டதாகவும் தொடர்ந்து இந்தப் பாடலை தான் மறந்தே விட்டதாகவும் கங்கை அமரன் கூறியுள்ளார். இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்தபோது கேட்ட விஜய், பாடல் குறித்து பாராட்டு தெரிவித்ததாகவும் மறந்துவிட்டார். இந்தப் பாடலை எழுதியபோது தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனாலும் யுவன் ட்யூனை அனுப்பியபோது 10 நிமிடங்களில் பாடல் வரிகளை தான் எழுதி அனுப்பிவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X