கங்கை அமரனின் எவர்க்ரீன் படம்... 32 ஆண்டுகளை நிறைவு செய்த கரகாட்டக்காரன்

சென்னை : கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக்பஸ்டர் படம் கரகாட்டக்காரன். ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டவர்களின் காம்பினேஷனில் இந்த படம் சூப்பர்ஹிட் ஆனது.

கரகாட்டக்காரன் படம் வெளிவந்து தற்போது 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கங்கை அமரன் இயக்கம்

கங்கை அமரன் இயக்கம்

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1989 ஜூன் 16ல் வெளிவந்த படம் கரகாட்டக்காரன். நடிகர் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம் ராமராஜனுக்கு அவரது கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.

சிறப்பான மாங்குயிலே பாடல்

சிறப்பான மாங்குயிலே பாடல்

இளையராஜாவின் கிராமிய இசையில், அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக மாங்குயிலே பூங்குயிலே பாடல் எப்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்தது. காதல், காமெடி, மோதல் என்று அனைத்து தளத்திலும் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டிருந்த இந்த படம் கங்கை அமரனின் சிறப்பான டைரக்ஷனுக்கும் சான்றாக அமைந்தது.

சிறப்பான வாழைப்பழ காமெடி

சிறப்பான வாழைப்பழ காமெடி

தில்லானா மோகனாம்பாள் கதையை ஒத்திருந்தபோதும் கிராமிய வாசனையுடன் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இந்த படம் ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. படத்தில் கவுண்டமணி, செந்திலின் வாழைப்பழ காமெடி உள்ளிட்டவை இந்த படத்திற்கு மேலும் சிறப்பை சேர்த்தது.

தமிழக அரசின் விருது

தமிழக அரசின் விருது

இந்த படம் மதுரை திரையரங்கு ஒன்றில் 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்ட பெருமை இந்த படத்திற்கு உண்டு. மேலும் 1989ன் தமிழக அரசின் சிறப்பு விருதும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இத்தகைய பெருமைகளை கொண்ட கரகாட்டக்காரன் படம் 32 ஆண்டுகளை இன்றைய தினம் நிறைவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X