அதென்ன ஸ்டைலிஷ் ரோல்? இயக்குனர் கவுரவ் விளக்கம்!
சென்னை: விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் எஃப் ஐ ஆர் படத்தில், ஸ்டைலிஷான வேடத்தில் நடிப்பதாக இயக்குனர் கவுரவ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம், எஃப்ஐஆர் - ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ். கவுதம் வாசுதேவ் மேனனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய மனு ஆனந்த் இயக்குகிறார். மஞ்சிமா மோகன் ஹீரோயின். ரைஸா வில்சன், ரெப்பா மோனிகா ஆகியோரும் நடிக்கின்றனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் கவுரவ் நாராயணன் இதில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவர், விமல் நடித்த தூங்கா நகரம், விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, உதயநிதி நடித்த இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கியவர். நான் ராஜாவாக போகிறேன், ஆறாது சினம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
எஃப் ஐ ஆர் படத்தில் நடிப்பது பற்றி கவுரவ் நாராயணனிடம் கேட்டபோது, இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். ஸ்டைலிஷான வேடம் இது. அதென்ன ஸ்டைலிஷான வேடம் என்றால், அதை விவரிக்க முடியாது. படத்தில் விஷ்ணு விஷாலுக்கு இணையான கேரக்டர் எனக்கு. நான் இயக்கும் படத்துக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த மாதம் அதுபற்றிய தகவல் வெளிவரும் என்றார்.


Click it and Unblock the Notifications











