இவர் தான் வில்லனா? விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் லிஸ்டில் இணைந்த பிரபல இயக்குநர்!

சென்னை: ராட்சசன் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இந்நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள எஃப்.ஐ.ஆர்., படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Director Gaurav joins the cast of Vishnu Vishals FIR

கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் எஃப்.ஐ.ஆர் - ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதம் போடப்பட்டது. பட பூஜையை தொடர்ந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு விஷ்ணு விஷால் கொடுத்துள்ள டெரர் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் பிக்பாஸ் ரய்சா வில்சன் மற்றும் பிகில் ரெபா மோனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தூங்கா நகரம் மற்றும் சிகரம் தொடு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கெளரவ் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் கெளரவ், தனக்கு இந்த படத்தில் ஸ்டைலிஷ் கதாபாத்திரம் என தெரிவித்துள்ளார்.

அப்போ கண்டிப்பா இவர் தான் எஃப்.ஐ.ஆர்., படத்தின் வில்லனாக இருப்பார் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.

விரைவில் இந்த படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர். வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X