அடடா.. இது நல்லா இருக்கே.. இந்த டைரக்டர் மாதிரி நீங்களும் ட்ரை பண்ணலாம் மக்களே!
சென்னை: லாக் டவுன் காலத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் தனது மகனுக்கு முடி வெட்டும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகமே கொரோனா வைரஸால் மிரண்டு போய் கிடக்கிறது. உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் தாக்குதலை பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ளது

உலகம் முழுக்க இதுவரை 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது. உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸில் இருந்து தங்களின் மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவிலும் நாடு முழுக்க ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிகள் முடங்கியுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் இருந்தப் படியே தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் நடிககைகளும் படப்பிடிப்பு இல்லாததால் உடற்பயிற்சி சமையல் என நேரத்தை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கௌரவ், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விட்டுள்ளார். அந்த போட்டோக்களை கௌரவ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
Recommended Video
மேலும் டைரக்டர்ஸ் கட், பிஸி வித் சஞ்சய் என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். கவுரவ் தனது மகனுக்கு வித்தியாசமான ஸ்டைலில் முடி வெட்டியுள்ளார். இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளி வருகின்றன. மேலும் இயக்குநர் கௌரவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











