Don't Miss!
- News
தாலியை கட்டு.. ஜாமீன் தரேன்.. நீதிபதி தீர்ப்பால் வெலவெலத்த கோர்ட்.. புதுக்கோட்டையில் சுவாரசியம்!
- Finance
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?
- Lifestyle
குளுக்கோஸ் உங்க உடலுக்கு ஏன் முக்கியம் தெரியுமா? சர்க்கரை நோய்க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
- Travel
மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த இந்திய நகரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கௌதம் மேனனுக்கு இரண்டு EX காதலிகளா... அவரே சொன்ன தகவல்!
சென்னை: ஸ்டைலிஷான காதல் படங்களுக்கு மிகவும் பெயர் போனவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்
மின்னலே,விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு ,பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் , என்னை அறிந்தால் ,அச்சம் என்பது மடமையடா என பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை இயக்கியுள்ளார்
இப்பொழுது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் தனக்கு இரண்டு காதல் தோல்விகள் இருப்பதாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு
வாரமும்
களைகட்டும்
ஓடிடி
ரிலீஸ்
படங்கள்...
இந்த
வாரம்
என்னென்ன
படங்கள்னு
பாக்கலாமா?

ஸ்டைலிஷான காதல்
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மிகவும் ஸ்டைலிஷாகவும் காதலை மிகவும் வித்தியாசமான கோணத்தில் அதே சமயத்தில் கவி தன்மை மாறாமலும் அப்படியே ஒவ்வொரு படங்களிலும் காட்சி படுத்தி வருகிறார். சிம்பு,சூர்யா, மாதவன், விக்ரம், அஜித் , சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

திருப்புமுனையாக அமைந்தது
மின்னலே மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கௌதம் மேனனுக்கு அந்தப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில் அதைத் தொடர்ந்து காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம்,வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்

50 கிலோ வரை உடல் எடையை குறைத்து
காதல் படங்கள் மட்டுமல்லாமல் ஆக்சன் படங்களுக்கும் பெயர் போன கௌதம் மேனன் இப்பொழுது மீண்டும் சிம்புவுடன் இணைந்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இந்த கூட்டணியை கொடுத்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. தயாரிப்பாளர் ஐசாரி. கே கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு 50 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். கிராமத்து கதைக் களத்தில் ஆக்ஷன் திரில்லரில் உருவாகி வரும் இப்படம் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இரண்டு EX காதலிகள்
காதல் படங்களில் ஹீரோயின்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அழகாகவும் நேர்த்தியாகவும் காட்டக்கூடிய கௌதம்மேனனுக்கு இரண்டு காதல் தோல்வி என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது. ஆனால் தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் பேசிய கௌதம் மேனன் தனக்கு இரண்டு EX காதலிகள் இருப்பதாகவும் அவர்கள் யாரும் இப்பொழுது என்னுடன் பேச்சு வார்த்தை இல்லை எனவும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். எதனால் பிரேக்கப் ஆனது என்று குறித்து அவர் பகிரவில்லை. என்னதான் பல சூப்பர் ஹிட் காதல் படங்களை இயக்கியிருந்தாலும் கௌதம் மேனனுக்கும் 2 காதல் தோல்விகள் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.