Director Gautham menon: வரும் துருவம் வரும்.. துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் உறுதி!

சென்னை: நடிகர் விக்ரமின் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் ரசிகர்களை ஏமாற்றி வரும் படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ள நிலையில், படத்தில் ரீத்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் 2018ம் ஆண்டிலேயே இந்த படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. மாறாக இன்று வரை படம் ரிலீசாவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

நீண்ட ஆண்டுகளாக முடங்கியிருந்த இந்தப் படத்தை தூசித் தட்டி மீண்டும் சில காட்சிகளை சேர்த்து படத்தை ரிலீசுக்கு தயார் படுத்தினார் கௌதம் மேனன். கடந்த ஆண்டு நவம்பரிலேயே படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து படம் ரிலீசாகாததற்கு கௌதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். தொடர்ந்து டிசம்பரில் படம் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அதுவும் நடக்கவில்லை. இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

Director Gautham menon assured about the release of Vikrams Dhruva natchathiram movie

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகராக தொடர்ந்து இருந்து வருகிறார். அவரது மகன் த்ருவ் விக்ரம் ஹீரோவான நிலையிலும் விக்ரம், ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆதித்த கரிகாலனாக இந்தப் படத்தில் விக்ரம் மாஸ் காட்டியிருந்தார். மல்ட்டி ஸ்டாரர் படமாக இருந்த போதிலும் படத்தில் விக்ரம் கேரக்டர் கவனம் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

துருவ நட்சத்திரம் படம்: படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீசும் தொடர்ந்து அடுத்தடுத்த காரணங்களால் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ரிலீஸ் முன்னதாக 2018ம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிடப்பட்டபடி படம் ரிலீசாகாமல் முடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தை கடந்த ஆண்டில் தூசித்தட்டி எடுத்த இயக்குநர் கௌதம் மேனன் ரிலீசுக்கான பணிகளில் ஈடுபட்டார்.

Director Gautham menon assured about the release of Vikrams Dhruva natchathiram movie


கௌதம் மேனன் உறுதி: கடந்த நவம்பர் மாதத்திலேயே படம் ரிலீசாகவிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இதையடுத்து ரசிகர்களிடையே கௌதம் மேனன் மன்னிப்பும் கேட்டிருந்தார். அடுத்ததாக டிசம்பரில் படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் சாத்தியப்படவில்லை. இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது ஜோஷ்வா இமை போல் காக்க படம் வரும் மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி இன்றைய தினம் படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.


ரசிகர்கள் எதிர்பார்ப்பு: ஜோஷ்வா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் கௌதம் மேனனிடம் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கௌதம் மேனன், வரும் துருவம் வரும் என்று புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் பதிலளத்துள்ளார். மிகுந்த மெனக்கெடல்களுடன் தன்னுடைய படங்களை எதிர்கொண்டு வருகிறார் விக்ரம். அவரது துருவ நட்சத்திரம் படம நீண்ட நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியான நிலையில், படத்தில் மிகவும் ஸ்டைலான் விக்ரமை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X