Director Gautham menon: மொட்டைமாடி பார்ட்டி.. ஜோஷ்வா டீமுடன் அஞ்சல பாட்டுப்பாடி அசத்திய கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் மற்றும் நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் கௌதம் மேனன். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் பல்வேறு காரணங்கள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக ரிலீசாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை நினைத்து முடங்கிப் போகாமல் தொடர்ந்து இந்தப் படத்தை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கௌதம் மேனன். நடிப்பிலும் களமிறங்கியுள்ள கௌதம் மேனன் அடுத்தடுத்து லியோ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வருகிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐசரி கணேஷின் சகோதரி மகன் வருண் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியான பர்பார்மென்சை அவர் அளித்துள்ளார். படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு முன்னதாகவே விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதி நெருக்கடி காரணமாக தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

Director Gautham menon enjoying party with Joshua movie team

இயக்குநர் கௌதம் மேனன்: தமிழில் மின்னலே படம் மூலம் சிறப்பான என்ட்ரியை கொடுத்தவர் இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனன். சூர்யா, கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ளது துருவ நட்சத்திரம் படம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கப்பட்ட இந்தப் படம் நிதி பிரச்சினைகள் காரணமாக முடங்கியது. கடந்த ஆண்டில் இந்தப் படத்தை மீண்டும் தூசித் தட்டி எடுத்த கௌதம் மேனன், சில காட்சிகளை சூட்டிங் எடுத்து படத்தை நிறைவு செய்தார்.

துருவ நட்சத்திரம் படம்: கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் படம் ரிலீசாகவில்லை. இதையடுத்து ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் கௌதம் மேனன். தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது. இந்நிலையில் கௌதம் மேனனின் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ள நிலையில் அவரது சகோதரியின் மகன் வருண் படத்தில் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். இந்தப் படத்திற்காக தன்னுடைய உடலை கணிசமாக ஏற்றியுள்ளார்.

ஜோஷ்வா படம் ரிலீஸ்: ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் வருணுக்கு ஜோடியாக ராஹீ நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக படக்குழுவினர் பல்வேறு பிரமோஷன்களில் ஈடுபட்டனர். இதையொட்டி தற்போது வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் கௌதம் மேனன், வருண் உள்ளிட்ட படக்குழுவினர் மொட்டை மாடி பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணி பார்ட்டியாக இல்லாமல் பாட்டுக் கச்சேரியாக இந்த பார்ட்டி அமைந்துள்ளது. தன்னுடைய வாரணம் ஆயிரம் படத்திலிருந்து அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல பாடலை சிறப்பாக பாடுகிறார் கௌதம் மேனன்.

மொட்டை மாடி பார்ட்டி: தொடர்ந்து அவரது பாடலை ரசித்து வருண் உள்ளிட்டவர்கள் உட்கார்ந்தபடியே நடனம் ஆடுவதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. அவர்களுடன் கௌதம் மேனனுடன் இணைந்து பாடலை பாடி ரசிக்கின்றனர். ரசிகர்களுடன் விரும்பும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் மறைந்த தன்னுடைய காதலியை நினைத்து சூர்யா உருகுவதாக அமைந்திருக்கும். பாடலின் காட்சி அமைப்புகளும் சிறப்பாக அமைந்திருந்த நிலையில் இந்தப் பாடலை தற்போது கௌதம் மேனன், வருண் உள்ளிட்டவர்கள் கொண்டாடியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X