விஜய் சேதுபதி -அபிஷேக் பச்சனை இயக்கும் கௌதம் மேனன்.. விரைவில் அறிவிப்பு!

சென்னை : நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற வெற்றிப் படத்தை கடந்த ஆண்டில் கொடுத்திருந்தார் கௌதம் மேனன்.

அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் கௌதம் மேனன் தற்போது விஜய்யின் லியோ படத்தின் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன்

இயக்குநர் கௌதம் மேனன்

இயக்குநர் கௌதம் மேனன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது படங்களில் ரொமான்ஸ், த்ரில்லிங் என அனைத்தும் கலந்து பார்வையாளர்களை கட்டிப் போடும். திரைக்கதையிலும் தன்னுடைய படங்களை சிறப்பாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கௌதம் மேனனுக்கு இணை அவர் மட்டுமே.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை சிறப்பான வகையில் இயக்கியிருந்தார் கௌதம் மேனன். சிம்புவின் வித்தியாசமான பரிணாமத்தை கொடுத்திருந்தது இந்தப் படம். சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படமாக வெளியான இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகராக கௌதம் மேனன்

நடிகராக கௌதம் மேனன்

அடுத்தடுத்த படங்களிலும் நடிகராக தன்னை இணைத்துவரும் கௌதம் மேனன் விஜய்யின் லியோ படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக அவரது இயக்கத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட் சூப்பர் ஹீரோக்களான விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

இதற்கான அறிவிப்பு விரைவில் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு ஹீரோக்கள் இணையும் இந்தப் படம் விக்ரம் வேதா போன்று கேங்ஸ்டர் படமாக உருவாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

துருவ நட்சத்திரம் படம்

துருவ நட்சத்திரம் படம்

ஸ்டைலிஷ் இயக்குநர் என்று கோலிவுட்டில் பெயர் பெற்றுள்ள கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக உள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ள சூழலில் தற்போது மீண்டும் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X