யாரும் எதிர்பார்க்காத கூட்டணி.. விஜய்யுடன் தளபதி 69 படத்தில் இணைந்த கௌதம் மேனன்.. இதிலும் போலீஸ்தானா

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், படத்தை முன்னதாக தகவல்கள் வெளியானபடி இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாஸ் கிளப்பும் கூட்டணி இணைந்துள்ளது. இதன் அறிவிப்பை கடந்த இரு தினங்களாக கேவிஎன் நிறுவனம் சமூக வலைதளங்களில் அறிவித்து வருகிறது.

vijay thalapathy 69 movie gautham menon

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக உருவாகவுள்ளது தளபதி 69. இந்தப் படத்துடன் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து கடந்த மாதத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படமும் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படமும் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன. இதில் கோட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய்களை தாண்டி இந்தப் படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 69 படம்: இதையடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் தளபதி 69 படம் உருவாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இணையவுள்ள நடிகர், நடிகைகள் குறித்து கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்த அறிவிப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ள நிலையில், நாயகியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும் மமிதா பைஜூ படத்தின் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் பட்டியல்: இதனிடையே, இன்றைய தினம் படத்தின் மற்றொரு நடிகரை கேவிஎன் அறிவித்துள்ளது. முன்னதாக படத்தின் நடிகர், நடிகைகளை முன்னதாகவே யூகித்திருப்பீர்கள், ஆனால் அடுத்ததாக அறிவிக்கவுள்ள நடிகரை நீங்கள் கெஸ் செய்திருக்க மாட்டீர்கள் என்ற அறிவிப்புடன் ரசிகர்களை காத்திருக்க வைத்தது. இந்நிலையில் படத்தில் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான கௌதம் மேனன் தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், இயக்கம், தயாரிப்பை தள்ளி வைத்துவிட்டு, அடுத்தடுத்து படங்களில் நடித்துவரும் நிலையில், தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.

விஜய்யுடன் இணைந்த கௌதம் மேனன்: இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் அதிகமாக போலீஸ் அதிகாரி வேடத்திலேயே நடித்து வருகிறார். அதனால், இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாகவே நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடையை தளபதி 69 படத்தில் எதிர்பார்க்கலாம். கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ளது துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தொடர்ந்து ரிலீசாகாமல் தள்ளிப் போகிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்காகவே தான் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதாக முன்னதாக கௌதம் மேனன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X