பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்த பிரபல இயக்குநர்.. மிரட்டலாக தயாராகும் 3.33!

சென்னை: பிக்பாஸ் நட்சத்திரங்கள் நடிக்கும் திகில் படத்தில் பிரபல இயக்குநரும் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆங்கிலத்தையும் தமிழையும் இணைத்து ஸ்டைலிஷாக படத்தை இயக்கும் இயக்குநர்களில் ஒருவர் கவுதம் மேனன்.

ஒரு பக்கம் படங்களை இயக்கி வந்தாலும் மறு பக்கம் நடித்தும் வருகிறார் கவுதம் மேனன். கடைசியாக அவர் இயக்கி நடித்திருந்த படம் குட்டி ஸ்டோரி.

நதிகளில் நீராடும் சூரியன்

நதிகளில் நீராடும் சூரியன்

ஆந்தாலஜி படமான இப்படத்தில் எதிர்பாரா முத்தம் என்ற கதையை இயக்கியிருந்தார் கவுதம் மேனன். இதில் நடித்தும் இருந்தார் கவுதம் மேனன். இதனை தொடர்ந்து சிம்புவை வைத்து நதிகளில் நீராடும் சூரியன் என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார் கவுதம் மேனன்.

சாண்டி லீடிங் ரோலில்..

சாண்டி லீடிங் ரோலில்..

இந்நிலையில் கவுதம் மேனன் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டான்ஸ் மாஸ்டரும் பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி 3.33 என்ற படத்தில் லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோரும் நடிக்கின்றனர்.

அமானுஷ்யங்கள்..

அமானுஷ்யங்கள்..

திகில் படமாக இப்படம் உருவாகிறது. இந்தப்படத்தில் இயக்குநர் கவுதம் மேனனும் இணைந்துள்ளார். இதில் அமானுஷ்யங்களை ஆய்வு செய்பவராக கவுதம் மேனன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கி வருகிறார். அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X