வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் பிரபல இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் பிரபல இயக்குநர் நடிக்கவுள்ளது உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தில் பிரபல இயக்குநரான கவுதம் மேனன் முக்கிய ரோலில் நடிக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் அருண் விஜய்யின் வா டீல் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. மீண்டும் வைரலாகும் நடிகர்கள் சூர்யா மற்றும் ஆமிர்கானின் பழையப் போட்டோ குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
இதேபோல் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தள்ளிப்போவது மற்றும் படம் குறித்து படக்குழு கூறிய அப்டேட்டையும் கூறியுள்ளார் பிகே. மேலும் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 65 படத்தின் சண்டைக்காட்சி மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர்
குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











