விஜய் சேதுபதி படத்தில் ஆன்போர்டான பிரபல இயக்குநர்... அசத்தல் தகவல்!

சென்னை: விஜய் சேதுபதி படத்தில் பிரபல இயக்குநர் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கவுதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கவுதம் மேனன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குநர் ஆனார் கவுதம் மேனன்.

தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார் கவுதம் மேனன்.

நடிகராகவும் வலம் வரும் கவுதம் மேனன்

நடிகராகவும் வலம் வரும் கவுதம் மேனன்

தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களையும் இயக்கி வருகிறார் கவுதம் மேனன். தற்போது ஜோஷ்வா, இமை போல் காக்க, துருவ நட்சத்திரம், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் கவுதம் மேனன்.

விஜய் சேதுபதியுடன் கவுதம் மேனன்

விஜய் சேதுபதியுடன் கவுதம் மேனன்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த கவுதம் மேனன், கடைசியாக ருத்ரதாண்டவம் படத்தில் நடித்தார். இந்நிலையில் மற்றொரு புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.

சந்தீப் கிஷன் லீடிங்

சந்தீப் கிஷன் லீடிங்

அதாவது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்.சி.புரொடக்ஷன்ஸ் இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

கவுதம் மேனன் வில்லன்

கவுதம் மேனன் வில்லன்

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க உள்ளார். இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லனாக நடிக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கவுதம் மேனன் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் நடித்துள்ள போதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து நடிக்கவுள்ள படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X