அந்த ட்ரிக்கை வைத்துதான் சூர்யாவை உயரமாக காட்டினோம்.. 17 வருஷ ரகசியத்தை போட்டுடைத்த கவுதம் மேனன்!
சென்னை: காக்க காக்க படத்தில் நடிகர் சூர்யாவை உயரமாக காட்டியது எப்படி என்பது குறித்து இயக்குநர் கவுதம் மேனன் மனம் திறந்து பேசியுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் காக்க காக்க. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
காக்க காக்க படத்தில் அன்பு செல்வன் ஐபிஎஸ் என்ற கதாப்பாத்திரத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

காக்க காக்க
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே செம ஹிட்டானது. காக்க காக்க படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப்படம் ரிலீஸ் ஆகி 17 ஆண்டுகள் ஆகியுள்ளது. இருந்த போதும் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சாத்தியமில்லை
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புகிறார் இயக்குநர் கவுதம் மேனன். வேண்டிய நேரத்தில் சூர்யா கை கொடுக்காததால் எதிர்வரும் காலங்களில் கவுதம் மேனனும் சூர்யாவும் இணைந்து பணியாற்ற சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

காக்க காக்க ரகசியம்
இதனால் காக்க காக்க இரண்டாம் பாகத்தில் விஷாலை வைத்து இயக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள இயக்குநர் கவுதம் மேனன் காக்க காக்க படத்தில் சூர்யாவை எப்படி உயரமாக காட்டினோம் என்ற ரகசியத்தை கூறியுள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு
அதாவது சூர்யாவை போலீஸ் லுக்கில் ஹைட்டாக காட்ட பல ஷாட்டுகளை லோ ஆங்கிளில் ஷுட் செய்ததாக கூறியுள்ளார். காக்க காக்க படத்தின் பல காட்சிகளில் சூர்யா உயரமாக காட்டப்பட்டிருப்பார். அது எப்படி என்பது புரியாத புதிராக இருந்த நிலையில் அந்த ரகசியத்தை 17 ஆண்டுகளுக்கு பிறகு கூறியிருக்கிறார் இயகுகுநர் கவுதம் மேனன்.


Click it and Unblock the Notifications











