Gautham menon :லியோ படத்துல விஜய் -த்ரிஷாவுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள்.. கௌதம் மேனன் உற்சாகம்!
சென்னை : இயக்குநர் கௌதம் மேனன் தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சென்னை சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 50 நாட்களை கடந்து நடந்த நிலையில், அங்கு சூட்டிங்கில் இயக்குநர் கௌதம் மேனன் பங்கேற்றார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

லியோ படம் குறித்து கௌதம் மேனன் உற்சாகம் : இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவர் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துவங்கிய இவரது நடிப்புப்பயணம் தொடர்ந்து வருகிறது. இடையிடையில் படங்களை இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த இந்தப் படம் இரு பாகங்களாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், இரண்டாவது பாகமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து தன்னுடைய நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துவரும் கௌதம் மேனன், தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில், படத்தின் பிரம்மாண்டமான பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ரிகர்சலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் காஷ்மீர் சூட்டிங்கில் கௌதம் மேனன் பங்கேற்றிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளதாகவும் அவருடன் 6 வில்லன்கள் மோதி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. படத்தில் கௌதம் மேனனுக்கு மிகவும் முக்கியமான ரோல் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கினும் நடித்துள்ள நிலையில், அவருடன் தனக்கு காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தனக்கும் விஜய் மற்றும் த்ரிஷாவிற்கும் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் லோகேஷிற்காக மட்டுமே தான் கமிட்டானதாகவும் விஜய்யை தொடர்ந்து இந்தப் படத்தில் கமிட்டான அடுத்த நடிகர் தான்தான் என்றும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் முக்கியமான ரோலில் தான் நடித்துள்ளதாகவும் செட்களில் மிகவும் பாதுகாப்பாக தான் உணர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











