Gautham menon :கமலுடன் இணைந்து நடிக்க மாட்டேன்.. காரணம் சொன்ன கௌதம் மேனன்!
சென்னை : இயக்குநர் கௌதம் மேனன் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் இயக்கியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
லியோ படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் உள்ளதாக கௌதம் மேனன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கமலுடன் இணைந்து நடிக்க விரும்பாத கௌதம் மேனன் : இயக்குநர் கௌதம் மேனன் தன்னுடைய படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கௌதம் மேனன் என்றாலே காதல் காட்சிகள் அதிகமாக வைப்பார் என்ற முத்திரை உள்ளது. மேலும் கேங்ஸ்டர் படங்களையும் அவர் கொடுத்துள்ளார். சமீபத்தில் சிம்புவை வைத்து கௌதம் மேனன் இயக்கியிருந்த படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
கேங்ஸ்டர் படமாக வெளியான இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் சிம்பு நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. குறிப்பாக மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே பாடல், கணவனை பிரிந்திருக்கும் பெண்ணின் துயரத்தை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பின்னணியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
ஒருபுறம் வெற்றிப் படங்களை இயக்கிவரும் கௌதம் மேனன், நடிப்பிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துவங்கிய இவரது நடிப்புப் பயணம் தொடர்ந்து வருகிறது. தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் உள்ளதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் லோகேஷிற்காக மட்டுமே நடிக்க கமிட்டானதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக கமலின் விக்ரம் படத்திலேயே தனக்கு லோகேஷ் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாகவும் செம்பன் வினோத் கேரக்டரில் நடிக்க தன்னை கேட்டதாகவும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் படத்தில் கமலுடன் காம்பினேஷன் காட்சிகள் உள்ளதா என்று தான் லோகேஷிடம் கேட்டதாகவும் அப்படி இருந்ததால் அந்த கேரக்டரை தான் மறுத்துவிட்டதாகவும் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
நடிப்பில் கமல் ஒரு ஜீனியஸ் என்றும் தான் தற்போதுதான் நடித்து வருவதாகவும் அதனால் கமலுடன் இணைந்து தான் நடிப்பது குறித்து தனக்கு அச்சம் ஏற்பட்டதாகவும் அதனால்தான் அந்த கேரக்டரை தான் மறுத்ததாகவும் கௌதம் மேனன் தெரிவித்தார். அடுத்ததாக கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால்கூட தான் நடிக்க மாட்டேன் என்றும் கௌதம் மேனன் கூறியுள்ளார். ஆனால் ஒரு ரசிகனாக கமலை இயக்கும் ஆர்வம் தனக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











