Gautham menon on Vijay: வாய்ப்பு கிடைத்தால் தளபதி 69 படத்தை இயக்குவேன்.. கௌதம் மேனன் ஆர்வம்!

சென்னை: இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜோஷ்வா இமை போல் காக்க. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். அவரது சகோதரி மகன் வருண் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்றைய தினம் ரிலீசாக உள்ள நிலையில் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது கௌதம் மேனன் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் வருண் ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக பார்க்கப்படுகிறார். ஆனால் இந்தப் படத்திற்காக அவர் போட்ட உழைப்பு மிகப்பெரியது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தில் நடிகர் கிருஷ்ணாவும் இணைந்துள்ளார்.

முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆனது. கேங்ஸ்டர் படமாக உருவாகியிருந்த இந்த படம் சிம்பு நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் நீண்ட வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ள துருவ நட்சத்திரம் படம் கடந்த ஆண்டு இறுதியிலேயே ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல பிரச்சினைகளால் இந்தப் படததின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா படம் ரிலீஸ் ஆக உள்ளது

Director Gautham menon shows interest to director Vijays Thalapathy 69 movie

இயக்குனர் கௌதம் மேனன்: இயக்குனர் கௌதம் மேனன் நடிகராகவும் இயக்குனராகவும் அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்து கொண்டு செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் சிம்பு கூட்டணியில் கௌதம் மேனன் இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. கேங்ஸ்டர் படமாக வெளியான இந்த படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் நீண்ட காலங்களாக ரிலீசாகாமல் உள்ள துருவ நட்சத்திரம் படம் கடந்த ஆண்டிலேயே வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில் டிரைலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

துருவ நட்சத்திரம் படம்: இந்நிலையில் நிதி பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய் போகிறது. இதனிடையே, ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள படம் ஜோஷ்வா இமைப் போல் காக்க. இந்த படத்தில் ஐசரி கணேசின் சகோதரி மகன் வருண் லீட் கேரக்டரில் நடித்துள்ள ஆக்சன் என்டர்டைனராக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடவுள்ளார். இதற்கான பிரமோ வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

ஜோஷ்வா பத்திரிகையாளர் சந்திப்பு: பிரமோ வீடியோவில் ஜெயம் ரவியை ஜோஷ்வா படத்தினை குறிக்கும் டி ஷர்ட் அணிய வைத்து வருண் புகைப்படம் எடுப்பதாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் பட குழுவினர் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் இயக்குனர் கௌதம் மேனனிடம் பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் அடுக்கினர். அதில் விஜயின் தளபதி 69 படம் குறித்தும் கேள்வி இருந்தது.

தளபதி 69 படம் குறித்து கௌதம் மேனன்: தளபதி 69 படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்வீர்களா என்று ஒருவர் கேள்வி எழுப்ப, கண்டிப்பாக செய்வேன், ஏன் செய்ய மாட்டேன் என்று கௌதம் மேனன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது The greatest of all tme படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார். இதனால் தளபதி 69 படத்தை இயக்கும் இயக்குனர் குறித்து அதிகமான கவனம் ஏற்பட்டுள்ளது. படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் டிவிவி தயாரிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவனத்தை ஏற்படுத்திய தளபதி 69: இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் முதல் த்ரிவிக்ரம் வரை இயக்குவதாக அடுத்தடுத்து தினந்தோறும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கௌதம் மேனனிடமும் தளபதி 69 படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரும் மிகவும் ஆர்வத்துடன் பதில் அளித்துள்ளார். கௌதம் மேனன் கூட்டணியில் அதிரடி ஆக்சன் அல்லது காதல் படத்தில் விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை இப்போதே ரசிகர்கள் கற்பனை செய்து பார்த்து வருகின்றனர். தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X