மாதவன் மகன் மட்டுமில்லை.. கெளதம் மேனன் மகனும் ஸ்போர்ட்ஸில் கில்லி தான்.. TNPLல் கலக்கும் ஆர்யா!

சென்னை: சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்கே வர வேண்டும் என்று இல்லாமல், அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து அதிலும் சாதனைகளை படைக்கலாம் என சில பிரபலங்களின் வாரிசுகள் எடுத்துக்காட்டாக மாறி வருகின்றனர்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகிறார்.

இந்நிலையில், மாதவனை வைத்து முதல் படத்தை இயக்கிய கெளதம் மேனனின் மகனும் சினிமாவுக்கு வராமல் கிரிக்கெட்டில் அதுவும் TNPLல் நுழைந்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரொமான்டிக் இயக்குநர்

ரொமான்டிக் இயக்குநர்

பிரசாந்தின் ஜோடி படத்தில் காதலுக்கு எதிராக இருக்கும் சின்னி ஜெயந்தை கட்டி வைத்து உலக காதல் படங்களை போட்டுக் காட்டுவார்கள். இப்போ அப்படியொரு சீன் வைத்தால் வெறும் கெளதம் மேனன் படங்களை போட்டுக் காட்டினாலே போதும். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான நவரசா வெப்சீரிஸ் இடம் பெற்ற கிட்டார் கம்பி மேலே நின்று கதையில் வரும் சூர்யாவின் காதல் காட்சிகளும் அதற்கு உதாரணமாகவே அமைந்திருக்கும். மின்னலே, காக்கா காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா படங்களின் காதல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே ஃபேமஸ்.

சினிமாவா? கிரிக்கெட்டா?

சினிமாவா? கிரிக்கெட்டா?

இயக்குநர் கெளதம் மேனனே ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் தானாம். ரசிகர் மட்டுமில்லாமல் நன்றாக கிரிக்கெட்டும் ஆடக் கூடியவர். சினிமாவா? அல்லது கிரிக்கெட்டா? எதை வாழ்க்கையாகத் தேர்வு செய்வது என முடிவெடுக்கும் நிலை வரும் போது சினிமாவை தேவு செய்திருக்கிறார் கெளதம் மேனன். இதனை அவரே பழைய பேட்டியில் குடும்பத்தை பற்றி கூறும்போது கூறியுள்ளார். கெளதம் மேனனின் மகன்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறவே முடிவெடுத்து அதற்கான முயற்சியில் மூத்த மகன் ஆர்யா தற்போது வெற்றியும் கண்டிருக்கிறார்.

கெளதம் மேனன் மகன்

கெளதம் மேனன் மகன்

தற்போது ஆரம்பித்துள்ள தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பந்து வீச்சாளராக களமிறங்கி உள்ளார் இயக்குநர் கெளதம் மேனன் மகன் ஆர்யா யோஹான் மேனன். நேற்று நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக இவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார். கெளதம் மேனன் மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Recommended Video

இந்த பக்கம் ஜனனி, இந்த பக்கம் ஐஸ்வர்யா | Ashok கலகல Speech | Vezham *Kollywood | Filmibeat Tamil
யோஹான் அத்தியாயம் ஒன்று

யோஹான் அத்தியாயம் ஒன்று

இயக்குநர் கெளதம் மேனன் நடிகர் விஜய்யை வைத்து இயக்க ஆரம்பித்து டிராப்பான யோஹான் அத்தியாம் ஒன்று படத்தின் டைட்டிலே இவரது மகன் ஆர்யா யோஹான் பெயரை வைத்துத் தானா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். கெளதம் மேனனின் மற்ற மகன்களும் கிரிக்கெட்டிலேயே ஆர்வம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X