சிஷ்யன் படத்தில் சிக்கலான கேரக்டர்... கலக்கப் போகிறார் கவுதம் மேனன்

By

சென்னை: விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும், எஃப்ஐஆர் படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம், எஃப்ஐஆர் - ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ். கவுதம் வாசுதேவ் மேனனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய மனு ஆனந்த் இயக்குகிறார்.

மஞ்சிமா மோகன் ஹீரோயின். ரைஸா வில்சன், ரெப்பா மோனிகா ஆகியோரும் நடிக்கின்றனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வத் இசை அமைக்கிறார்.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இந்தப் படத்தில் இயக்குனர் கவுரவ் நாராயணன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இவர், விமல் நடித்த தூங்கா நகரம், விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, உதயநிதி நடித்த இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கியவர்.

கவுதம் மேனன்

கவுதம் மேனன்

இதையடுத்து மற்றொரு இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனனும் இதில் இணைந்துள்ளார்.
இதுபற்றி நடிகர் விஷ்ணு விஷால் கூறும்போது, இந்த கேரக்டருக்கு நல்ல குரல் வளமும் உடல் மொழியும் உள்ள நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.

சிக்கலான கேரக்டர்

சிக்கலான கேரக்டர்

கதைப்படி இது ஒரு சிக்கலான கேரக்டர். அதனால் இதில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தோம். கடைசியில் நான் தான், இயக்குனர் மனுவிடம் கவுதம் மேனனை கேட்கலாம் என்றேன்.

கெஸ்ட் ரோலா?

கெஸ்ட் ரோலா?

மனு, அவரது சிஷ்யன் என்பதால் கேட்டார். கேரக்டரை விவரித்ததும் வேறு ஒன்றும் சொல்லவில்லை. உடனடியாக ஓகே சொன்னார். அவர் கேரக்டர் கெஸ்ட் ரோல் போல இருக்காது. படம் முழுவதும் வரும் கேரக்டர். அவரோடு நடிப்பது உற்சாகமாக இருக்கும். அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X