twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்களின் கடைசி உரையாடல்… விவேக்கை நினைந்து உருகும் கௌதம் மேனன்!

    |

    சென்னை : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக்கிடம் இறுதியாக பேசியதை நினைவு கூர்ந்துள்ளார்.

    Recommended Video

    Vivek சார் கூட இருந்த அந்த Golden Days | Actor Shiva Exclusive | #closecal l Filmibeat Tamil

    அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான நிகழ்ச்சி தான் LOL எங்க சிரி பார்ப்போம்.

    பிரபு சாலமன் படத்தில் நடிக்கும் பிரபல அரசியல்வாதி.. அடுத்த மாசம் ஷூட்டிங்காம்! பிரபு சாலமன் படத்தில் நடிக்கும் பிரபல அரசியல்வாதி.. அடுத்த மாசம் ஷூட்டிங்காம்!

    இந்த நிகழ்ச்சியை மறைந்த நடிகர் விவேக் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை பலரும் பாராட்டி அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    நடிகர் விவேக்

    நடிகர் விவேக்

    சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது.

    LOL எங்க சிரி பார்ப்போம்

    LOL எங்க சிரி பார்ப்போம்

    அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான நிகழ்ச்சி தான் LOL எங்க சிரி பார்ப்போம். சின்ன கலைவாணர் விவேக், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா ஆகியோர் சேர்ந்து தொகுத்து வழங்கி இருந்தார்கள். விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி இது தான். காமெடியில் அசால்ட் பண்ணும் அவர், முதல் முதலாக ஓடிடி தள நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

    அவ்வளவு எனர்ஜி

    அவ்வளவு எனர்ஜி

    விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்பதால் பலரும் அதை விரும்பி பார்த்தனர். LOL:எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது விவேக் சார் உயிருடன் இல்லை என்கிற உணர்வே இல்லை. அவரிடம் அவ்வளவு எனர்ஜி இருக்கிறது. இறந்தும் நம்மை எல்லாம் கவலையை மறந்து சிரிக்க வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

    எங்கள் கடைசி உரையாடல்

    எங்கள் கடைசி உரையாடல்

    இந்த நிகழ்ச்சியை பார்த்த பிரபல இயக்குனர் கெளதம் மேனன் விவேக் இறுதியாக பேசிய சில விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் டிஜிட்டல் வெளியீடாக விவேக்குடன் ஒரு படம் திட்டமிட்டிருந்தேன். அவரது, முதல் ஓடிடி நிகழ்ச்சியான எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சி வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றார். அதுதான் எங்கள் கடைசி உரையாடல், ஓடிடியில் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது அதை நினைத்துப் பார்க்கிறேன். என்ன ஒரு உற்சாகமான நிகழ்ச்சி. சொக்கு, ரிவால்வர் ரிச்சர்ட் இரண்டு கதாபாத்திரங்களின் நினைவுகளுடன், என கெளதம் மேனன் தனது நினைவுகளை பகிர்ந்து இருந்தார்.

    பிடித்த கலைஞர்

    பிடித்த கலைஞர்

    அந்த நிகழ்ச்சியில் அவருடன் தொகுத்து வழங்கிய நடிகர் சிவாவும் ,எனக்கு பிடித்த கலைஞர் விவேக் சார். அவருடன் இணைந்து நான் கடைசியாக பணியாற்றியது இந்தப் படப்பிடிப்பின் போதுதான் என்பதால் எல்ஓஎல் நிகழ்ச்சி என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என கூறியிருந்தார்.

    போட்டியாளர்கள்

    போட்டியாளர்கள்

    6 எபிசோடுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக காமெடி நடிகர்கள் சதீஷ், பிரேம்ஜி, பவர்ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி, குக் வித் கோமாளி புகழ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், அபிஷேக் குமார், மாயா கிருஷ்ணன், ஷியாமா ஹரிணி, பேகி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    English summary
    Director Gautham Menon went into nostalgic mode as he recollected some fond memories with the late actor Vivek.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X