இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் டா.. ஸ்டைலிஷ் இயக்குநர் கெளதம் மேனன்.. டிரெண்டாகும் #HappyBirthdayGVM!

சென்னை: தமிழ் சினிமாவில் ஸ்டைலான ஃபிலிம் மேக்கிங்கை கொண்டு வந்த இயக்குநர்களில், கெளதம் மேனனுக்கும் தனி இடம் இருக்கிறது.

Recommended Video

QUEEN WEB SERIES PRESSMEET | RAMYAKRISHNAN | GAUTHAM VASUDEV MENON | FILMIBEAT TAMIL

தனது திரைப்படங்களில், ஆங்கில வசனங்கள் அதிகம் இருந்தாலும், தலைப்பில் தூய தமிழை அலங்கரிக்கும் திறமை கொண்ட கெளதம் மேனனின் 47வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கெளதம் மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு, ட்விட்டரில் #HappyBirthdayGVM என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி, வாழ்த்து மழை குவிகிறது.

ராஜீவ் மேனன் சிஷ்யன்

ராஜீவ் மேனன் சிஷ்யன்

பிரபுதேவா, கஜோல், அரவிந்த்சாமி, நாசர் நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தை இயக்கிய இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கெளதம் வாசுதேவ் மேனன், கேரளாவில் உள்ள ஒட்டப்பாலத்தில் பிப்., 25, 1973ல் பிறந்தார். 47 வயதாகும் கெளதம் மேனனுக்கு சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பமே அசத்தல்

ஆரம்பமே அசத்தல்

கேரளாவில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது சென்னையில், உள்ள அண்ணா நகரில் தான். மேலும், புதுக்கோட்டையில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வந்த கெளதம், என்ஜினியரிங்லாம் செட் ஆகாது, சினிமா தான் என விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு மாதிரி சொல்லிவிட்டு மின்னலே படத்தை இயக்கி முதல் படத்தையே வெற்றிப்படமாக மாற்றினார்.

தமிழ் தலைப்பு

தமிழ் தலைப்பு

கெளதம் மேனன் படங்களில், ஹாலிவுட் பட ஸ்டைல் மற்றும், ஆங்கில வசனங்கள் அதிகமாக இருந்தாலும், தமிழ் மேல் தீராத காதல் கொண்ட கெளதம், தலைப்புகளை தமிழிலேயே வைத்து வருகிறார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நீதானே என் பொன் வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா, எனை நோக்கிப் பாயும் தோட்டா என தொடர்கிறது.

கேங் ஆஃப் கெளதம்

கெளதம் மேனன் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கெளதம் மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு, கேங் ஆஃப் கெளதம் வாசுதேவ் மேனன் என்ற இலுஸ்ட்ரேஷன் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. அதில், சிம்பு, அஜித், சூர்யா, தனுஷ் மற்றும் கெளதம் மேனன் உள்ளனர். கெளதம் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

தல ரசிகர்கள்

மங்காத்தா படத்திற்கு பிறகு மற்றொரு வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தல அஜித்துக்கு, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. விக்டராக நடித்த அருண் விஜய்க்கும் அந்த படம் கம்பேக் கொடுத்தது. அந்த வெற்றிக்கு என்றுமே அஜித் ரசிகர்கள் கடமைப் பட்டவர்களாக கெளதம் மேனனை எப்போதுமே தாங்கிப் பிடித்து வருகின்றனர்.

மீண்டும் இணைவார்களா?

காக்க காக்க, வாரணம் ஆயிரம் என நடிகர் சூர்யாவுக்கு இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கெளதம் மேனன் கொடுத்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்திலும், சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு, பின்னர் கிளம்பிய கருத்து வேறுபாட்டால், அந்த கூட்டணி பிரிந்தது. மீண்டும், சூர்யா - கெளதம் மேனன் கூட்டணி உருவாக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.

காதல் மன்னன்

காதல் படங்கள் எடுப்பதிலும், ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் வசனங்களை வைப்பதிலும் கெளதம் மேனன் கிங் என்றே சொல்லலாம். மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், அச்சம் என்பது மடமையடா மற்றும் எனை நோக்கிப் பாயும் தோட்டா என பல படங்களில், காதல் ரசம் வழியும்.

ஜி.வி.எம் மாஷ்-அப்

ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமின்றி, ரொமான்டிக் பாடல்களும், கெளதம் மேனன் படங்களில், அதிகளவு ரசிகர்களை வசியம் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். ஹாரிஷ் ஜெயராஜ், ஏ.ஆர். ரஹ்மான் இசைகளில், பாடலாசிரியர் தாமரை வரிகளில் பல ஹிட் காதல் பாடல்களை கெளதம் மேனன் கொடுத்துள்ளார். அவருக்கான அழகான மாஷ்-அப் ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர்.

பிரச்சனை

பிரச்சனை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த கெளதம் மேனன், சில ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒன்றாக என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக, எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார். தற்போது, தனது பிரச்சனைகளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து, மீண்டும் எழுந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X