கொலை.. தற்கொலை என மிரட்டும்..கருப்பங்காட்டு வலசு டீஸர்.. கௌதம் மேனன் வெளியிட்டார் !
சென்னை: ஒரு கிராமத்தில் நடக்கும் ஜாதிச்சண்டை எதிர்பாராத கொலைகள், தற்கொலைகள் என அதிபயங்கர காட்சிகளுடன் வெளியானது கருப்பங்காட்டு வலசு படத்தின் டீசர்.
இந்த டீசரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த டீசர் இப்போது பெரும் எ திர்பார்ப்புடன் அனைவராலும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
நீலிமா முதன்முறையாக நாயகியாக இப்படத்தில் நடிக்கிறார். இது நாள் வரை தொலைக்காட்சி தொடர்கள், சீரியல்கள் , படங்கள் என பலவற்றில் நடித்து பிரபலமான முகம் என்றாலும், இந்த படத்தில் தான் இவர் ஒரு முன்னணி நாயகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கத்திக்குத்து ரத்தம்
சலங்கை கட்டுன காலு, கருப்பன் சும்மா இருக்க விடமாட்டாயா என மிரட்டும் தோணியில் டிரைலர் தொடங்குகிறது. கத்தி குத்து இரத்தம் என ஆரம்பத்திலேயே காட்டப்படுகிறது சில சாதிவெறியர்களின் வெறியாட்டம்.

கிராமத்தை முன்னேற்றும் நீலிமா
இப்படி ஜாதிச்சண்டை மதச்சண்டை என பின்தங்கியுள்ள இந்த கிராமத்தை முன்னோக்கி கொண்டுபோக கழிப்பறை வசதி, குப்பை மேலாண்மை, ஆங்கிலம் கற்பித்தல், சிசிடிவி கேமரா ஊரெங்கும் பொருத்துதல் என என்னென்ன அடிப்படைத் தேவைகள் அந்த கிராமத்தில் உள்ளதோ அதை அனைத்தையும் முன்னெடுத்து தன்னாலான அனைத்து முயற்சிகளையும் கொண்டு அந்த கிராமத்தை முன்னேற்றும் முயற்சியை மேற்கொள்கிறார் காந்திமதி என்ற கதாபாத்திரத்தில் வரும் நீலிமா.

நிலைகுலைந்த கிராமம்
அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று, எல்லாம் நல்லதா நடந்து வந்த கிராமத்தில், ஒன்றான் பின் ஒன்றாக நடக்கும் கொலை , தற்கொலை என்று திடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவம் ஒட்டு மொத்த கிராமத்தையும் நிலைகுலைய வைக்கிறது. அந்த சம்பவத்தின் பின்னணிகளையும் சுவாரசியமான காரணங்களையும் கொண்டு நகர்கிறது இந்த படத்தின் கதை

எதிர்பார்ப்பு
ஒரு காலத்துல இந்த ஊரே எனக்கு சொந்தம் என மாரி செல்லதுரை ஏதோ ஒன்று சொல்ல வர நமக்கு இன்னும் எதிர்பார்ப்பு பற்றிக்கொள்கிறது. இந்த ஊரையும் ஊரைச்சுற்றி நடக்கும் கொலைகளையும் அதன் பின்னணிகளையும் விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரியாக வருகிறார் ஜார்ஜ்.

மிடுக்கு போலீஸ் அதிகாரி
விஜய் டிவி பிரபலம் ஜார்ஜ் விஜய் நெல்சன் போலீஸ் கேரக்டரில் மிடுக்குடன் வந்து அனைவரையும் மிரட்டுகிறார். அவனுங்கள அடிக்கிற அடியில உண்மையை ஒத்துக்குறானுங்களோ இல்லையோ, அவங்க ஜாதி எண்ணங்குறத மறந்துடணும். இவ்வாறு போலீசுக்கு உரித்தான மிரட்டும் தோணியில் வசனங்களால் வந்து நம்மை மிரட்டியிருக்கிறார் ஜார்ஜ்.

எதிர்பாராத திருப்பங்கள்
இப்படி இந்த கிராமத்தில் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதை சற்றும் எதிர்பாராத மக்களும், அதிகாரிகளும், சமூக சேவகர்களும் நிலைகுலைந்து போக நடப்பதெல்லாம் நம்மை அச்சுறுத்தும் காட்சிகளோடு கொண்டு செல்கின்றனர். இப்படி சாதி கொலைகள், எதிர்பாராத திருப்பங்கள் என மாறி மாறி நடக்கும் கொடூர செயல்களை இந்த கிராமத்தில் இருக்கும் அனைவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த டிரைலரின் மூலம் சுவாரஸ்யமாக சொல்ல வருகிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வேந்திரன் இயக்கியுள்ளார். எபினேசர் தேவராஜ் இந்தப் படத்தை தயாரித்தும், நடித்தும் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











