முதல்ல விஜய் சேதுபதி... இப்ப இவர்... 'ஓ மை கடவுளே' படத்தில் இன்னொரு கெஸ்ட்... தயாரிப்பாளர் விளக்கம்
Recommended Video
சென்னை: ஓ மை கடவுளே படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகும் படம், ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மாடர்ன் காதலை சொல்லும் படம் இது. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தை அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிச்கர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி
சக்தி பிலிம் பேக்டரி படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர், புரமோ பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி இதில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

கவுதம் வாசுதேவ் மேனன்
இந்நிலையில் மற்றொரு இயக்குனரும் இணைந்துள்ளார். அவர் கவுதம் வாசுதேவ் மேனன். இதுபற்றி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு கூறும்போது, படத்தில் சில காட்சி, படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அதில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம்.

ஒப்புக்கொண்டார்
அதோடு காதல் படங்களை சிறப்பாக இயக்கும் இயக்குனராக இருந்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று நினைத்தோம். அதன்படி கவுதம் வாசுதேவ் மேனனைத் தேர்வு செய்துள்ளோம். அவரிடம் கதையையும், கேரக்டரையும் சொன்னதும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

காதலர் தினத்தன்று
இந்தப் படம் இளைஞர்களை கவரும் காதல் படமாக இருக்கும். விறுவிறுப்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாத படம். அசோக் செல்வன், ரித்திகா உட்பட பலரும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வரும் 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியாகிறது. சென்சார் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











