Story Of Things.. விசித்திரமான மர்மம் நிறைந்த பயணம்..“ஸ்டோரி ஆஃப் திங்ஸ்“ முன்னோட்டம்!
சென்னை : 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' ஆந்தாலஜி திரைப்படம் மனிதர்களைச் சுற்றி நடக்கும் விசித்திரமான மற்றும் ஓர் மர்மம் நிறைந்த பயணமாகும்.
Cellular, Weighing Scale, Compressor, Car, Mirror எனத் தலைப்பிடப்பட்டுள்ள ஐந்து வித்தியாசமான கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி திரைப்படமாகும்.
ஜார்ஜ் கே ஆண்டனி இயக்கியுள்ள இந்தப் படத்தை Chutzpah Films தயாரித்துள்ளது.

ஸ்டோரி ஆஃப் திங்ஸ்
அமானுஷ்யம் நிறைந்த திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்து ரசிக்கும் அமானுஷ்ய பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கும் திரைப்படம் தான் 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்'. நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் நம்மிடம் பேசினால், நம்மை பயமுறுத்தினால், நம்மை புரிந்து கொண்டு நமக்கு உதவி செய்தால் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான சிந்தனை தான் 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்'.

5 வித்தியாசமான கதை
முதல் படமான 'Weighing Scale' கதையில் பரத் நிவாஸ் மற்றும் லிங்கா நடித்துள்ளனர். 'Mirror' கதையில் வினோத் கிஷன் மற்றும் அன்ஷிதா ஆனந்த், Cellular கதையில் அதிதி பாலன், கெளதமி தடிமல்லா மற்றும் அர்ஜூன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். Car கதையில் சாந்தனு பாக்யராஜ், சித்திக் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ளனர். ரித்திகா சிங் மற்றும் ரோஜூ Compressor கதையில் நடித்துள்ளனர்.

அட்டகாசமான கதை
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் குற்ற உணர்வு, வருத்தம், குழப்பம், பயம்,பாவம் போன்றவற்றை திகிலுடன் அட்டகாசமான கதைகளுடன் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் ஜார்ஜ் கே ஆண்டனி. இந்த கதைகளை உளவியல் ரீதியாக சம்பந்தபட்ட கதாபாத்திரத்தை பொறுமையுடன் அணுகி இருக்கிறார் ஜார்ஜ்.

Weighing Scale
Weighing Scale என்ற கதையில் ஒரு தவறை செய்து விட்டு அது தவறு என்று தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல், குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கதையாகும். நாம் செய்யும் பாவங்களால் நமது உடலில் எடை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதை குறிக்கும் வகையில் இப்படத்திற்கு Weighing Scale என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பரத், லிங்கா நள்ளிரவில் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத வகையில் நடக்கும் விபத்து. அதன் பின் ஏற்படும் குற்ற உணர்ச்சியை அழகான பின்னணி இசையுடன் ஹாட் பீட்டை எகுறவைத்து இருக்கிறார் இயக்குநர்.

முழு விமர்சனம் அடுத்த வாரம்
முதல் ஆந்தாலஜி படமே அட்டகாசமாக அச்சமுட்டும் வகையில் இருந்ததால், அடுத்தடுத்த படங்களின் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கதையும் குறைந்தது 40 நிமிடத்திற்கு மிகாமல் அதே விறுவிறுப்புடன் உள்ளன. இந்த ஆந்தாலாஜி திரைப்படத்தை சுட்பா புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரி ப்ரசாத் தயாரித்துள்ளார். சோனி லிவ் டிஜிட்டல் ஓடிடி தளத்தில் இந்த 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' ஆந்தாலாஜி படம் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் ஸ்டோரி ஆஃப் திங்ஸ் ஆந்தாலாஜி படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











