ஓவர் போதை.. 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பிரபல இயக்குநரின் மகன் !
மும்பை : பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன் குடித்துவிட்டு 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு மும்பை அந்தேரி பகுதியில் இயக்குநர் குடும்பத்துடன் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டில் நடந்துள்ளது.
மனனின் இறுதிச் சடங்குகள் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இயக்குநருக்கு பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.

கிரிஷ் மாலிக்
2020ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடித்த டோர்பாஸ் படத்தின் இயக்குனர் கிரிஷ் மாலிக். இவர் ஷோலா அவுர் ஷப்னம், திரங்கா போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில், கிரிஷ் மாலிக் 18வயது மகனான மனன், நேற்று ஐந்தாவது மாடியிலிந்து குதித்துள்ளார். ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை அருகில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

விபத்த? தற்கொலையா?
இது விபத்தா அல்லது தற்கொலையா என்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இது தற்கொலை என அம்போலி காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் பந்தோபந்த் பன்சோட் கூறினார். கிரிஷ் மாலிக்கின் மகன், மனன் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிவிட்டு, தன்னிலை தெரியாத அளவுக்கு குடித்துள்ளார். வீட்டுக்கு வந்த பிறகும் குடித்துக்கொண்டே இருந்துள்ளார். தொடர்ந்து மகன், மனன் குடித்துக்கொண்டு இருந்ததால், மாலிக் கடுமையான வார்த்தையால் திட்டி உள்ளார்

குடிபோதையில்
இதனால், தந்தை மற்றும் தாய் இருவர் மீதும் கோபமாக இருந்த மனன். வீட்டில் அனைவரும் அசந்த நேரத்தில், 5வது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார். ரத்த காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் பலனின்றி உயிரிழந்தார். துரதிர்ஷ்டவசமான இந்தச் செய்திக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திறமையான பையன்
சஞ்சய் தத், தனது ட்விட்டர் பக்கத்தில் சொல்ல முடியாதளவுக்கு நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். நான் மனனை பட சூட்டிங்கில் இரண்டு முறை பார்த்திருக்கிறேன், திறமை வாய்ந்த பையன். ஒருபோதும் திரும்பப்பெற முடியாத இந்த இழப்பை அவரும் குடும்பமும் தாங்கிக் கொள்ள இறைவன் வலு கொடுக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











