படத்தை வாங்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கிறார்: தலைவா படத் தயாரிப்பாளர் மீது புகார்

By Siva

Director gives a complaint against Thalaiva producer
சென்னை: தலைவா படத் தயாரிப்பாளர் தன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,

நான் உளவுத்துறை, ஜனனம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது சத்யராஜ் கதாநாயகனாக வைத்து 'கலவரம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை இரண்டு வாரங்களுக்கு முன் நேரில் அழைத்து பேசினார். அப்போது எங்களுடைய தலைவா படத்தின் பிரச்னையில் நாளை முடிவு தெரிந்துவிடும். தெரிந்ததும் தலைவா படத்தை உடனே வெளியிடுகிறோம். உங்களுடைய படம் கலவரம் வெளியிட்டால் எனது தலைவா படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது.

எனவே நானே உங்களுடைய படத்தினை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன். ஒப்பந்தம் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார். அதன்படி நேற்று ஒப்பந்தத்தோடு சந்திரபிரகாஷ் ஜெயினை சந்திக்க சென்றோம். அதற்கு அவர் எங்களை சந்திக்க மறுத்ததுடன், எங்களை தாழ்த்தியும் அவமானப்படுத்தியது மட்டுமில்லாது உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி படத்தை வாங்க மறுத்துவிட்டார். படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும் எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து செள்ளுவதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்த பிரச்னையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X