Don't Miss!
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிம்புவின் கொரோனா குமார் படத்துக்கு வந்த சோதனையா இது?: அப்போ அதிதி ஷங்கரும் அம்போ தானா?
சென்னை: மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சிம்பு.
Recommended Video

வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் சிம்புவின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ளன.
இதனைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த 'கொரோனா குமார்' படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
Thiruchitrambalam
Box
Office:
பாசிட்டிவ்
விமர்சனங்கள்
பறக்குது..
திருச்சிற்றம்பலம்
2வது
நாள்
வசூல்!

எதிர்பார்க்கப்பட்ட கொரோனா குமார்
'மாநாடு' படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உற்சாகம் அடைந்த சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படங்களில் பிஸியானார். இதில், வெந்து தணிந்தது காடு, செப்டம்பர் இறுதியிலும், பத்து தல டிசம்பரிலும் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆகியிருந்தார்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா ஆகிய படங்களை இயக்கியிருந்த கோகுல், கொரோனா குமார் படத்தை காமெடி ஜானரில் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. குறிப்பாக இது விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிப் பெற்ற 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் 2ம் பாகமாக இருக்கும் எனவும் தகவல் வெளியானது. இதனால், சிம்புவின் நடிப்பில் முழுநீள காமெடி திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர்.

சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர்?
கார்த்தியின் விருமன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அதிதி ஷங்கர், 'கொரோனா குமார்' படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்வதாக செய்திகள் வெளியாகின. இந்த அப்டேட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்தது. விருமனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் கமிட் ஆன அதிதி, அடுத்து சிம்புவுக்கும் ஜோடியாகவிருந்தது முன்னணி நடிகைகளுக்கு கிலியை ஏற்படுத்தியது.

கொரோனா குமார் அவ்ளோ தானா?
கொரோனா குமார் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் 'கொரோனா குமார்' படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 'கொரோனா குமார்' படத்திற்குப் பதிலாக ஆர்.ஜே. பலாஜி நடிக்கும் படத்தை கோகுல் இயக்கவுள்ளாராம். இந்தப் படத்திற்கு 'சிங்கப்பூர் சலூன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.