நயன்தாரா பட இயக்குநர் மீது வன்மமா.. லீக்கான ஆடியோ.. விருதை தூக்கி எறிந்த கோபி நயினார்!

சென்னை: அறம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் இயக்குநர் கோபி நயினார். அண்மையில் இவர் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. அதில், ஆளும் கட்சி குறித்தும் கூட்டணி குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தது. அதற்கு அந்த கட்சியின் ஆதரவாளர்கள் கோபி நயினாரின் மனம் நோகும்படி பேசியதாக தெரிகிறது. இதனால், அறம் படத்திற்காக கொடுத்த விருதை திருப்பி அளிப்பதாக அவர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதை மையப்படுத்தி இயக்கியிருந்தார் கோபி நயினார்.இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நயன்தாராவுக்க நல்ல பெயரை பெற்றுத் தந்த படம் அறம். விமர்சன ரிதீயாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின்பே நயன்தாராவின் மார்க்கெட் உயர்ந்தது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதற்கு உரித்தானவர் என்ற அடையாளத்தையும் பெற்றார் நயன்தாரா. இதைத்தொடர்ந்து ஆண்ட்ரியாவை வைத்து மனுசி, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள கறுப்பர் நகரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

director-gopi-nainar-return-his-periyar-awards

கதை திருட்டு: அறம் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நான் இயக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறி என் கதைகளை திருடி ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு, கத்தி போன்ற படங்களில் இருந்து எடுக்கப்பட்ட கதைகள் என்னுடையது என்று கோபி நயினார் வாதிட்டார். என்னிடம் கதையை கேட்டு ஏமாற்றிவிட்டார் என பகிரங்க குற்றச்சாட்டு முருகதாஸ் மறுப்பு தெரிவித்தார். பின்பு அறம் படம் வெளியானபோது ஏ.ஆர்.முருகதாஸ் நயன்தாராவை எச்சரித்தார். என் மீது பலி சுமத்திய இயக்குநர் படத்தில் நடிப்பதை ஏற்கவில்லை என தெரிவித்தார்.

மெட்ராஸ் பட சர்ச்சை: அதேபான்று பா,ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படமும் என் கதைதான் என கோபி நயினார் வாதிட்டார். இதனால், இருவருக்குமே முரண் ஏற்பட்டது. பா.ரஞ்சித் பேசினால் அதற்கு எதிராக கோபி நயினாரின் பேச்சும் இருக்கும். ஒரே மேடையில் இருவரும் பேசிக்காவிட்டாலும் மெட்ராஸ் படத்தின் மீதான சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், அறம் படத்தின் மூலம் கிடைத்த விருதை கோபி நயினார் திருப்பி அளிப்பதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

director-gopi-nainar-return-his-periyar-awards

ஆடியோ லீக்: இயக்குநராக மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பவர் கோபி நயினார். ஆளும் கட்சி குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால், அவரை ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளால் அவரை திட்டி வருகின்றனர். வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் செல்போனிலும் மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் கோபி நயினார் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், "நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது. நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன். என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FAQs
நயன்தாரா நடித்த அறம் படம் எந்த ஆண்டு வெளியானது?

2017

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X