நான் சந்திக்கவே இல்லை.. அன்புசெல்வன் படக்குழு மீது இயக்குநர் கவுதம் மேனன் பரபரப்பு புகார்!

சென்னை: அன்புசெல்வன் படக்குழு மீது இயக்குநர் கவுதம் மேனன் தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கவுதம் மேனன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குநர் ஆனார் கவுதம் மேனன்.

தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

நடிகராகவும் வலம் வரும் கவுதம் மேனன்

நடிகராகவும் வலம் வரும் கவுதம் மேனன்

தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களையும் இயக்கி வருகிறார் கவுதம் மேனன். தற்போது ஜோஷ்வா இமை போல் காக்க, துருவ நட்சத்திரம், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் கவுதம் மேனன்.

கடைசியான ருத்ர தாண்டவம்

கடைசியான ருத்ர தாண்டவம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் டிசிபி பிரதாப் சக்கரவர்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவரது இந்த கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. கடைசியாக மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார் கவுதம் மேனன்.

ஃபர்ஸ்ட் லுக்கால் அதிர்ச்சி

ஃபர்ஸ்ட் லுக்கால் அதிர்ச்சி

இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் அன்பு செல்வன் படக்குழு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அண்மையில் அன்புசெல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் கையில் துப்பாக்கியுடன் கவுதம் மேனன் இருப்பதாக இருந்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் கவுதம் மேனன்.

இயக்குநரை சந்திக்கவில்லை

இயக்குநரை சந்திக்கவில்லை

மேலும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இயக்குனரை தான் சந்திக்கவில்லை என்றும், ஆனால் இப்படத்தில் தானும் நடிப்பதாக தயாரிப்பாளர் வீடியோ வெளியிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதுதொ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியுள்ள கவுதம் மேனன், அன்புசெல்வன் படக்குழு மீது புகார் அளித்துள்ளார்.

மீண்டும் தொடங்கும் வேலைகள்

மீண்டும் தொடங்கும் வேலைகள்

ஜெய் கணேஷ் இயக்கத்தில் 'வினா' என்ற படத்தில் நடிக்க கவுதம் மேனன் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. 2018ஆம் ஆண்டு இப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வினோத்குமார் இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

படக்குழு வேலைகளை நிறுத்த வேண்டும்

படக்குழு வேலைகளை நிறுத்த வேண்டும்

ஆனால் ஜெய் கணேஷ் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்று கௌதம் மேனன் கூறியுள்ளார். எனவே, 'அன்புசெல்வன்' படம் தொடர்பான நடவடிக்கைகளை படக்குழு நிறுத்த வேண்டும் என்று கவுதம் மேனன் கேட்டுக்கொண்டுள்ளார். இயக்குநர் கவுதம் மேனன் அன்புசெல்வன் படக்குழு மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X