தளபதி 67 படத்தில் இணையும் பிரபல இயக்குநர்.. என்ன கேரக்டரா இருக்கும்?
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசுப் படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சில பேட்ச் வொர்க் மட்டுமே இன்னும் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அக்டோபரில் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளது தெரிந்த விஷயம்தான்.
ஆனாலும் இந்தப் படத்தின் அறிவிப்பு இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. வாரிசு படத்தின் சூட்டிங் நிறைவடைந்தால் மட்டுமே படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66வது படத்தில் நடித்து வருகிறார். வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது. படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார்.

பொங்கல் ரிலீஸ்
பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ள நிலையில், இவர்களின் பாடல் காட்சிகள் தற்போது சூட் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த அப்டேட்டிற்காக வெயிட்டிங்
படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியானதோடு இந்தப் படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் உள்ளது. ஆனால் அவ்வப்போது படத்தின் காட்சிகள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் லீக்காகி அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

அடுத்த வாரத்தில் பர்ஸ்ட் சிங்கிள்?
இந்நிலையில் அடுத்த வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாகவும் கூறப் படுகிறது. படத்திற்கு தமன் இசையமைத்து வரும் நிலையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் இணையவுள்ளார்.

டிசம்பரில் தளபதி 67 சூட்டிங்?
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கௌதம் மேனன் தற்போதைய தனது பேட்டியில் விக்ரம் படத்திலேயே நடிக்க இயக்குநர் லோகேஷ் தன்னை அணுகியதாகவும் ஆனால் அது நடக்காமல் போனதாகவும் இந்நிலையில் அவரது அடுத்தப்படத்தில் தான் நடிப்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் ஜோடி கீர்த்தி சுரேஷ்?
படத்தில் இணையவுள்ள நடிகர் நடிகைகள் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. முன்னதாக சமந்தா, த்ரிஷா விஜய்யுடன் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 67ல் கௌதம் மேனன்
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கௌதம் மேனன் தற்போதைய தனது பேட்டியில் விக்ரம் படத்திலேயே நடிக்க இயக்குநர் லோகேஷ் தன்னை அணுகியதாகவும் ஆனால் அது நடக்காமல் போனதாகவும் இந்நிலையில் அவரது அடுத்தப்படத்தில் தான் நடிப்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிப்பில் அதிக கவனம்
தொடர்ந்து படங்களையும் இயக்கிவரும் கௌதம் மேனன்,அதிகமான படங்களில் நடித்தும் வருகிறார். அவரது கம்பீரமான லுக் மற்றும் வாய்ஸ் படங்களுக்கு தேவையான கூடுதல் அட்ராக்ஷனைக் கொடுப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், அடுத்ததாக அவர் விஜய் 67 படத்தில் லோகேஷ் இயக்கத்தில் இணைவது விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக உற்சாகமான செய்தியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications











