கமலுக்கு நான்தான் ஒரிஜினல் ஃபேன் பாய்..லோகேஷ் கனகராஜுக்கு சவால் விட்ட இயக்குநர் கௌதம் மேனன்

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய ஃபேன் பேஸ் உள்ளது. அவரை ரசிகர்கள் உலக நாயகன் என்று கொண்டாடி வருகின்றனர்.

திரைப்படங்களின் என்சைக்கிளோபீடியோவாக காணப்படும் கமலை இயக்க இப்போதும் அதிகமான இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்கு சமீபத்திய உதாரணம் லோகேஷ் கனகராஜ். தான் கமலின் தீவிரமான ரசிகர் என்றுக் கூறிக்கொண்டுதான் அவர் விக்ரம் படத்தை இயக்கி முடித்தார்.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச அளவில் மிகச்சிறந்த ஃபேன் பேஸ் காணப்படுகிறது. அவரை உலகநாயகன் என்று ரசிகர்கள் கொண்டாடி வருவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. தமிழ் மட்டுமில்லாமல் உலக சினிமாவின் என்சைக்கிளோபீடியாகவாக இருக்கிறார் கமல். அவர் டச் பண்ணாத விஷயங்களே சினிமாவில் இல்லை என்று கூறலாம்.

இயக்கத்தில் கமலின் குறுக்கீடு?

இயக்கத்தில் கமலின் குறுக்கீடு?

கமல் நடிக்கும் படங்களில் இயக்கத்தல் அவரது குறுக்கீடு இல்லாமல் இருக்காது என்று வழக்கமாக கூறப்படுவதுண்டு. இயக்கம் உள்ளிட்ட சினிமாவின் அத்தனை விஷயங்களிலும் அத்துப்படியா இருக்கும் ஒரு நபர், ஒரு காட்சியில் பர்பெக்ஷன் வருவதற்காக சில குறுக்கீடுகளை செய்யாமல் இருப்பது கடினம்தான்.

விக்ரம் மேக்கிங்கில் குறுக்கிடாத கமல்

விக்ரம் மேக்கிங்கில் குறுக்கிடாத கமல்

ஆனால் அந்த வகையில் கமலின் குறுக்கீடு தன்னுடைய விக்ரம் படத்தில் இல்லை என்றும், கமல் தனக்கு முழு சுதந்திரம் அளித்ததாகவும் படத்தின் பிரமோஷனின்போது லோகேஷ் கனகராஜ் கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் படம் துவங்கும் முன்னனே தான் கமலின் தீவிர ரசிகன் என்றும் அதனால் இந்தப் படத்தில் அவரை தன்னுடைய விருப்பத்திற்கு ஆட்டுவிக்கப் போவதாகவும் லோகேஷ் குறிப்பிட்டிருந்தார்.

ரசிகன் கொடுத்த சிறப்பான படம்

ரசிகன் கொடுத்த சிறப்பான படம்

அதுபோலவே நிகழ்ந்ததன் விளைவுதான் விக்ரம் படம். ஒரு ரசிகனால், தன்னுடைய மனம்கவர்ந்த நடிகருக்கு எந்தவகையில் சிறப்பை கொடுக்க முடியுமோ அதை எல்லாவற்றையும் விக்ரம் படத்தில் மேற்கொண்டிருந்தார் லோகேஷ். விளைவு படம் அதிரி புதிரி வெற்றி.

வேட்டையாடு விளையாடு படம்

வேட்டையாடு விளையாடு படம்

ஒரு ரசிகனால்தான் தன்னுடைய மனம்கவர்ந்த நடிகரை திரையில் மிகவும் சிறப்பாக கொண்டுவர முடியும் என்பதற்கு மற்றொரு உதாரணம் கமலின் வேட்டையாடு விளையாடு படம். இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். ஆம் அவரும் கமலின் தீவிர ரசிகன்தான். இதை அவர் பல முறை தனது பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

நான்தான் ஒரிஜினல் ஃபேன் பாய்

நான்தான் ஒரிஜினல் ஃபேன் பாய்

உண்மையில் தான்தான் கமலின் ஒரிஜினல் ஃபேன் பாய் என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த இடத்திற்கு போட்டி போட நிறைய பேர் வருவார்கள் என்றும் சண்டையும் போடுவார்கள் என்றும் கூறிய கௌதம் மேனன், சண்டையென்று வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும் என்றும் அதற்கு தான் ரெடி என்றும் அவர் மேலும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கண்களை காட்டி மிரட்டிய கமல்

கண்களை காட்டி மிரட்டிய கமல்

கமலும் இடம்பெற்றிருந்த அந்தப் பேட்டியில் வேட்டையாடு விளையாடு படத்தில் கண்களை காட்டி வில்லன்களை மிரட்டும் காட்சியில் வித்தியாசமாக எதையாவது செய்தால் நன்றாக இருக்கும் என்பதை மட்டுமே தான் சொன்னதாகவும் தொடர்ந்து அந்தக் காட்சியில் கண்ணு வேணும்னு சொன்னியாமே பட்டி என்று அதை வித்தியாசமாக்கியது கமலின் ஒரிஜினல் என்றும் கூறியுள்ளார்.

சிறப்பாக்கிய ரவிவர்மன்

சிறப்பாக்கிய ரவிவர்மன்

தனக்கு தற்போதும் நினைவில் உள்ளதாகவும் அந்தக் காட்சியில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம், ரவி புடி புடி என்று தான் கத்தியதாகவும், அந்த காட்சியில் அவர் சிறப்பான ஜூம் இன் செய்து காட்சியை சிறப்பாக்க உதவியதாகவும் கௌதம் மேனன் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

காக்க காக்க படத்தில் கமல்?

காக்க காக்க படத்தில் கமல்?

பல படங்களை, காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் படங்களை கொடுத்துவரும் கௌதம் மேனன் கமலை வைத்து முதலில் இயக்க நினைத்தது காக்க காக்க படத்தைதான். அப்போது கமல் மிகவும் பிசியாக இருந்ததால் தொடர்ந்து அந்தப் படத்தை சூர்யாவை வைத்து இயக்கியதாகவும் கௌதம் மேனன் மற்றொரு பேட்டியில் கூறியிருந்தார்.

கமலிடம் ஓகே வாங்கிய கௌதம் மேனன்

கமலிடம் ஓகே வாங்கிய கௌதம் மேனன்

இதேபோல வேட்டையாடு விளையாடு படத்திலும் முதலில் நடிக்கவிருந்தது மோகன்லால் தானாம், ஆனால் பல காரணங்களால் அது நடக்காமல் போக தொடர்ந்து கமலிடம் கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் ஜோதிகா, கமலினி, பிரகாஷ் ராஜ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த நிலையில், த்ரில்லர் வகையில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X