என்னுடைய கதைக்குள் விஜய் வந்தால் மட்டுமே இயக்குவேன்... கௌதம் மேனன் பளீர்

சென்னை : இயக்குநர் கௌதம் மேனன் சிறப்பான பல காதல் கதைகளை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

Recommended Video

Cook With Comali Ashwin Speech | Yaathi Yaathi Song | Tamil Filmibeat

இவரது படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாக அமைந்துவிடும். தற்போது நடிப்பிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் குறித்த விஷயங்களை கௌதம் மேனன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன்

இயக்குநர் கௌதம் மேனன்

சிறப்பான பல படங்களை இயக்கி இந்திய அளவில் முக்கியமான டைரக்டராக தன்னை நிரூபித்துள்ளவர் கௌதம் மேனன். பெரும்பாலும் காதலை மையமாக கொண்டே இவரது படங்கள் இருக்கும். அதில் ஆக்ஷனையும் சேர்த்து சிறப்பாக கொடுப்பதில் வல்லவராக உள்ளார்.

நடிப்பிலும் கவனம்

நடிப்பிலும் கவனம்

தற்போது இவர் நடிப்பிலும் தன்னை நிரூபித்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கேரக்டர்களில் இவர் நடித்து வருகிறார். ஏற்கனவே டைரக்டராக உள்ளதால் இவருக்கு நடிப்பு சிறப்பாக அமைகிறது. மேலும் பல முன்னணி நடிகர்களையும் வைத்து இவர் படங்களை இயக்கி வருகிறார்.

நிறுத்தப்பட்ட விஜய் படம்

நிறுத்தப்பட்ட விஜய் படம்

அஜித், சூர்யா, சிம்பு, மாதவன், விக்ரம் என பல முன்னணி கதாநாயகர்களை வைத்து இவர் படங்களை இயக்கியுள்ளார். ஆனால் தளபதி விஜய்யை இவர் இதுவரை இயக்கவில்லை. ஆனால் விஜய் -கௌதம் மேனன் கூட்டணியில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படம் அறிவிக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்டது.

புகைப்படங்கள் வெளியீடு

புகைப்படங்கள் வெளியீடு

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் விஜய்யை வைத்து படத்தை இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் இன்னும் ரெடியாகவில்லை என்று கௌதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கதைக்கு விஜய் ஃபிட்டானால் இயக்குவேன்

கதைக்கு விஜய் ஃபிட்டானால் இயக்குவேன்

தன்னுடைய கதைக்குள் விஜய் ஃபிட்டானால் மட்டுமே தான் அவரை வைத்து கதையை இயக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார், அவருக்காக கதையை தான் யோசித்து உருவாக்கினால் அது சிறப்பாக வெளியாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது விஜய்க்கும் நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

ரீமேக் படத்தின் திட்டம்

ரீமேக் படத்தின் திட்டம்

தொடர்ந்து பேசிய அவர், அஜித்தை வைத்து முதலில் ரீமேக் படத்தை இயக்கவே தான் ஒப்பந்தமானதாகவும் ஆனால் அவருக்கு தான் தயார் செய்திருந்த கதையை அவருக்கு விளக்கி அந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியதாகவும் கௌதம் மேனன் குறிப்பிட்டார்.

ஒரிஜினாலிட்டியை இழக்க வேண்டாம்

ஒரிஜினாலிட்டியை இழக்க வேண்டாம்

வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு கதையை தனக்கு கொடுத்தால் தான் நடிப்பதாக அஜித் குறிப்பிட்டதாகவும் அதன்படியே என்னை அறிந்தால் படம் உருவானதாகவும் கௌதம் மேனன் மேலும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் தனக்காக எந்தவிதமான பஞ்ச் டயலாக்கையும் வைக்கக்கூடாது என்று அஜித் தெரிவித்தது தன்னை நெகிழ வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

நெகிழ வைத்த அஜித்

நெகிழ வைத்த அஜித்

படத்தில் விவேக்கை வைத்து அஜித்திற்காக பஞ்ச் டயலாக்கை வைத்தபோது, அதையும் அவர் மறுத்து, தன்னுடைய இயல்பை தனக்காக மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் கூறினார். தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

சிம்புவுடன் படம்

சிம்புவுடன் படம்

இந்தப் படத்தின் போஸ்டர்கள், உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. எப்போது காதல் கதையை கையில் எடுத்து ஹீரோவை மிகவும் அழகாக காட்டும் கௌதம் மேனன், இந்தப் படத்தில் சிம்புவை வித்தியாசமான கோணத்தில் காட்டியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X