அந்த விஷயத்துல லோகேஷ் கனகராஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. கவுதம் மேனன் பகிர்ந்த விஷயம்

சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

லியோ படத்தின் மூலம் விஜய் -லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். முன்னதாக மாஸ்டர் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்திருந்தனர்.

இந்தப் படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

லியோ படம்

லியோ படம்

நடிகர் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் லியோ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் ஏறக்குறைய 50 நாட்கள் காஷ்மீரில் மிகுந்த குளிருக்கிடையில் நடைபெற்று முடிந்துள்ளது. படக்குழுவினர் சூட்டிங்கின்போது பட்ட கஷ்டங்கள் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியானது.

இரண்டாவது முறையாக கூட்டணி

இரண்டாவது முறையாக கூட்டணி

மாஸ்டர் படத்தில் வித்தியாசமான விஜய்யை காட்டியிருந்தார் லோகேஷ். புரொபசராக இருந்தாலும் முழு நேரமும் குடிப்பவராக அவர் காட்டப்பட்டிருந்தார். அவர் மாறும் தருணமும் சிறப்பாக அமைந்திருந்தது. இதனிடையே, இந்தப் படத்திற்காக தான் அதிகமான காம்பரமைஸ்களை செய்ததாகவும் இந்தப் படம் தன்னுடைய 50 சதவிகித படமாக மட்டுமே அமைந்ததாகவும் லோகேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

 100 சதவிகித லோகேஷ் படம்

100 சதவிகித லோகேஷ் படம்

இதனிடையே, லியோ படம் தன்னுடைய 100 சதவிகித படமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிறப்பான திட்டமிடலுடன் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் முதல் கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர் அடுத்தடுத்து சென்னை உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தவுள்ளனர். தற்போது சிறிய பிரேக்கில் உள்ளனர்.

விஜய் குறித்து கவுதம் மேனன் கருத்து

விஜய் குறித்து கவுதம் மேனன் கருத்து

இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங்கில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன் பங்கேற்ற நிலையில், விஜய்யுடன் இணைந்து நடித்தது மிகவும் வியப்பான அனுபவத்தை கொடுத்ததாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். காஷ்மீர் சூட்டிங் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாகவும், விரைவில் சென்னையில் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே தன்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜ், படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டையும் வெளியில் கூறக்கூடாது என்று தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ஸ்ட்ரிக்ட்

லோகேஷ் கனகராஜ் ஸ்ட்ரிக்ட்

அந்த விஷயத்தில் லோகேஷ் கனகராஜ் மிகவும் ஸ்ட்ரிக்ட் என்றும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட பல படங்களில் கவுதம் மேனன் தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் தன்னுடைய இயக்கத்தையும் கைவிடாமல் அதிலும் சிறப்பாக உழைத்து வருகிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X