அஜித்தின் வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் செய்த காரியம்...அசந்து போன ரசிகர்கள்

சென்னை : அஜித்தின் வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் செய்த காரியத்தை டைரக்டர் ஹச்.வினோத் பகிர்ந்துள்ளார். இதைக் கேட்டு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அசந்து போய், அவரை பாராட்டி வருகின்றனர்.

ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் வரும் ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. வெளியிடப்பட்ட 22 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது.

குழப்பத்தில் வலிமை படக்குழு

குழப்பத்தில் வலிமை படக்குழு

சென்சார் போர்டின் ஒப்புதல் கிடைத்து விட்டதால், படத்திற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதே சமயம் ஒமைக்ரான் பரவலால் ஆர்ஆர்ஆர் பட ரிலீஸ் ஒத்திவைப்பு, தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி போன்றவற்றால் என்ன செய்வதென தெரியாத குழப்ப நிலையிலும் படக்குழு இருந்து வருகிறது.

திட்டமிட்டபடி வலிமை ரிலீசாகுமா

திட்டமிட்டபடி வலிமை ரிலீசாகுமா

தற்போது தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ம் தேதி வரை மட்டுமே தொடரும். ஆனால் தற்போது கொரோனா மூன்றாம் அலை துவங்கி விட்டதாக அமைச்சரே கூறி இருப்பதால் 10 ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அப்படி நடந்தாலும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் அது படத்தின் வசூலை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டைரக்டர்

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டைரக்டர்

இதற்கிடையில் படம் துவங்கியது முதல் இதுவரை அமைதி காத்து வந்த டைரக்டர் ஹச்.வினோத், தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க வலிமை ஸ்டில்ஸ், படம் பற்றிய ஏதாவது ஒரு தகவலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் அஜித் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாக அவற்றை கொண்டாடி வருகின்றனர்.

2 பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்

2 பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்

வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேற மாரி பாடலையும், செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள அம்மா பாடலையும் டைரக்டர் விக்னேஷ் சிவன் தான் எழுதி உள்ளார். இந்த இரண்டு பாடல்களின் வரிகளுமே அனைவரையும் மிகவும் கவர்ந்து விட்டதால் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இது வேற செய்திருக்காரா

இது வேற செய்திருக்காரா

படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்து, ரிலீசிற்கு முன்பே படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கும் இந்த பாடல்களை எழுதியதற்காக சம்பளம் எதுவும் விக்னேஷ் சிவன் வாங்கவில்லையாம். கொடுத்த சம்பள தொகை வாங்க அவர் மறுத்து விட்ட தகவலை டைரக்டர் ஹச்.வினோத் தற்போது வெளியிட்டுள்ளார். இவ்வளவு அற்புதமான பாடல் வரிகளை எழுதி விட்டு விக்னேஷ் சிவன் சம்பளம் வாங்கவில்லை என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

Recommended Video

தெறிக்கும் 'வலிமை' டிரைலர்..! மகிழ்ச்சிக்கடலில் AK ரசிகர்கள்..!
என்ன காரணம் இதற்கு

என்ன காரணம் இதற்கு

இது அஜித் மீதான நல்ல மதிப்பு காரணமாகவா அல்லது நட்பு அடிப்படையிலானதா அல்லது அடுத்து அஜித்தை இயக்க விக்னேஷ் சிவன் அடிபோடுகிறாரா என பல விதமாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இருந்தாலும் எல்லாவற்றையும் செய்து விட்டு எதுவுமே செய்யாதது போல் அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாரே என பலர் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X