For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வழவழன்னு பேசாம வேலையை செய்யும் வலிமை இயக்குநருக்கு பிறந்தநாள்.. தல ரசிகர்கள் வாழ்த்து!

  |

  சென்னை: தல அஜித்தின் வலிமை படத்தை இயக்கி வரும் இயக்குநர் எச். வினோத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

  Valimai Update | Yuvan Shankar Raja Interview | U1 Records | Tamil Filmibeat

  சதுரங்க வேட்டை படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் எச். வினோத்.

  பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு வளைகாப்பு...பாரதியுடன் சென்று வாழ்த்திய கண்ணம்மாபாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு வளைகாப்பு...பாரதியுடன் சென்று வாழ்த்திய கண்ணம்மா

  தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தன.

  40 வயசு

  40 வயசு

  1981ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வேலூரில் பிறந்த இயக்குநர் எச். வினோத் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தல அஜித்தின் வலிமை படத்தை இயக்கி வரும் எச். வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையில் அவரை நனைத்து வருகின்றனர்.

  பார்த்திபனிடம்

  பார்த்திபனிடம்

  பச்சக் குதிரை படத்தை இயக்கி நடித்த நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இவர். கோலி சோடா படத்தை ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்க அந்த படத்திலும் உதவி இயக்குநராக எச். வினோத் பணியாற்றினார்.

  பணம் மீது ஆசை

  பணம் மீது ஆசை

  எப்படியாவது பணக்காரன் ஆக வேண்டும் என்கிற வெறி பிடித்த மனிதன் எப்படியெல்லாம் மோசடி செய்து மக்களை ஏமாற்றுகிறான் என்பதை சுட்டிக் காட்ட தனது முதல் படமான சதுரங்க வேட்டையில், சமூகத்தில் நடக்கும் எம்.எல்.எம், ரைஸ் புல்லிங், மண்ணுளி பாம்பு போன்ற பல விஷயங்களை அடுக்கி நகைச்சுவை கலந்து சொன்ன விதத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் இயக்குநர் வினோத். அந்த படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் கிடைக்காத காலம் சென்று தற்போது தல அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் வினோத்.

  தீரன் அதிகாரம் ஒன்று

  தீரன் அதிகாரம் ஒன்று

  கமர்ஷியல் படங்களை எடுத்தாலும், அதிலும் ஒரு நல்ல கதை இருக்க வேண்டும் என்று நினைத்து பணியாற்றுபவர் தான் இயக்குநர் எச். வினோத். சதுரங்க வேட்டை படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் உண்மையான பாவரியா குற்றப்பரம்பரையினர் குறித்த கதையை தீரன் அதிகாரம் ஒன்று என இயக்கி மிகப் பெரிய வெற்றியை பெற்றார்.

  பிங்க் ரீமேக்

  பிங்க் ரீமேக்

  மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கு காரணமாக தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் சில படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் மிகப்பெரிய பாராட்டுக்களை அள்ளிய பிங்க் படத்தின் ரீமேக் படத்தை நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் இயக்குநர் எச். வினோத்தை இயக்க பணித்த அஜித், உங்க ஸ்டைலில் ஒரு படமும் அடுத்து எடுங்க என்கிற உத்தரவாதத்தையும் தந்தார்.

  வேற மாறி வலிமை

  வேற மாறி வலிமை

  தல அஜித் என்றாலே ரேஸ் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும், முழுக்க முழுக்க ஒரு ரேஸ் படத்தை அதிரடி ஆக்‌ஷன் கலந்து தல அஜித்தை வைத்து எடுத்து விடலாம் என இயக்குநர் எச். வினோத் இயக்கி வரும் படம் தான் வலிமை. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் அஜித் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  குவிகிறது வாழ்த்து

  குவிகிறது வாழ்த்து

  #HBDDearestHVINOTH என்கிற ஹாஷ்டேக்கை போட்டு தல ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர். இயக்குநர் எச். வினோத்துக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  செகண்ட் சிங்கிள்

  செகண்ட் சிங்கிள்

  தல அஜித் ரஷ்யாவில் பைக் டிராவல் செய்த புகைப்படங்கள் வெளியான நிலையில், இன்று இயக்குநர் எச். வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தில் இருந்து வெயிட்டான அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே நாங்க வேற மாறி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ஹிட்டான நிலையில், அடுத்து செகண்ட் சிங்கிள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Director H Vinoth turns 40 today. Thala fans celebrating his birthday on social media and waiting for another Valimai update.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X